அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண்
அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ், விலை 220ரூ.
சினிமா நட்சத்திரமாக ஒளிவீசி, பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்து, தமிழக முதல்-அமைச்சராகபணிபுரிந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறந்த முறையில் எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகாசுப்ரமணியன்.
இந்தப் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் –
ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் 85படங்கள் வெள்ளிவிழா (25 வாரம்) கொண்டாடியவை. நடிக்க மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் திறமையானவர்.திரைப்படங்களில் 11 பாடல்கள் பாடியுள்ளார்.
1968-ல் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்திப்படத்தில் ஜெயலலிதாநடித்துள்ளார். – இப்படி பல தகவல்கள் நிறைந்துள்ளன.
நன்றி: தினத்தந்தி, 16/8/2017