குற்றவியல் சட்டங்கள்

குற்றவியல் சட்டங்கள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 800ரூ. 1860-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் 2013-ம் ஆண்டு வரை செய்யப்பட்ட குற்றவியல் சட்டதிருத்தங்கள் உள்பட அனைத்து பிரிவுகளும் தரப்பட்டு இருக்கின்றன. என்னென்ன செய்கைகள் குற்றத்தன்மை கொண்டவை, அவற்றுக்கு என்ன தண்டனை ஆகியவை விளக்கி கூறப்பட்டுள்ளன. இந்திய சாட்சியச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் ஆகியவற்றில் தற்போது வரை இணைக்கப்பட்ட பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான வழக்கு தீர்வுகளும், தமிழ்நாடு தேர்வாணயத் தேர்வுகளுக்குப் பொருந்தும் சட்டங்களும் கொடுக்கப்பட்டு இருப்பதால் சட்டம் தொடர்பான […]

Read more

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள்

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 150ரூ. நோட்டரி பப்ளிக் எனப்படும் சான்றுறுதி அதிகாரிகள் தொடர்பான சட்டம் மற்றும் விதிகள் அவர்களது அதிகாரம் ஆகிய அனைத்தும் மாதிரி படிவங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டு இருக்கின்றன. நோட்டரி பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 650ரூ. அரசு அலுவலகங்களில் ஊழில் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகக் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முழு விவரங்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் நீதி மன்றத்தை அணுகாமலேயே வீட்டில் இருந்தபடி குறைந்த செலவில் நீதியைப் பெற முடியும் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவலைக் கேட்டுப் பெற 30 நாட்கள் காத்திருக்கத் தேவை இல்லை, 48 மணி நேரத்திலேயே தகவலைக் […]

Read more

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள்

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 150ரூ. நோட்டரி பப்ளிக் எனப்படும் சான்றுறுதி அதிகாரிகள் தொடர்பான சட்டம் மற்றும் விதிகள், அவர்களது அதிகாரம் ஆகிய அனைத்தும் மாதிரி படிவங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டு இருக்கின்றன. நோட்டரி பதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண்

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ், விலை 220ரூ. சினிமா நட்சத்திரமாக ஒளிவீசி, பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்து, தமிழக முதல்-அமைச்சராகபணிபுரிந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறந்த முறையில் எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகாசுப்ரமணியன். இந்தப் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் – ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் 85படங்கள் வெள்ளிவிழா (25 வாரம்) கொண்டாடியவை. நடிக்க மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் திறமையானவர்.திரைப்படங்களில் 11 பாடல்கள் பாடியுள்ளார். 1968-ல் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற […]

Read more

இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்

,இணையக் குற்றங்களும், இணையவெளிச் சட்டங்களும், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ் விலை 225ரூ. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித சமூகத்திற்கு கிடைத்த அளப்பரிய வசதி இணையம். ஆனால், வசதி, வளர்ச்சியுடன் சேர்ந்து, தவறுகளும், பிரச்னைகளும் எழுவது வழக்கம். அந்த வகையில், இணையக் குற்றங்கள் தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதை கட்டுப்படுத்த, நவீன சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இணையம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான குற்றங்களும், அதை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் […]

Read more

சந்திரசேகரம்

சந்திரசேகரம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 312, விலை 175ரூ. துறவு என்றால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது என்பது பொதுப்படையான அர்த்தம். எல்லாவற்றோடும் ஒன்றி இருப்பது என்பது, காஞ்சிப் பெரியவர் கொடுத்த விசேஷ அர்த்தம். காஞ்சிப் பெரியவர் என்பதை மட்டும், சில காகிதங்களில் அச்சிட்டு வெளியிட்டாலே, அதை வாங்கிப் படிக்கும் அளவுக்கு பக்தர்கள் பெருகிவிட்டனர் இன்று. இதில் நேர்முக வர்ணனையாக பெரியவரைப் பற்றிய செய்திகளையும், பெரியவர் கொடுத்த செய்திகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன். ஒரு வகையில் இதை தெய்வத்தின் குரலுக்கு பாஷ்யம் […]

Read more