இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்

,இணையக் குற்றங்களும், இணையவெளிச் சட்டங்களும், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ் விலை 225ரூ.

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித சமூகத்திற்கு கிடைத்த அளப்பரிய வசதி இணையம். ஆனால், வசதி, வளர்ச்சியுடன் சேர்ந்து, தவறுகளும், பிரச்னைகளும் எழுவது வழக்கம். அந்த வகையில், இணையக் குற்றங்கள் தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதை கட்டுப்படுத்த, நவீன சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இணையம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான குற்றங்களும், அதை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறது இந்த புத்தகம். ‘ஹாக்கிங்’ எனப்படும், தகவல்கள் திருட்டு முதல், மென்பொருள் திருட்டு வரை, அனைத்து விதமான இணையக் குற்றங்கள் பற்றி, இலங்கைத் தமிழில் விரிவாக ஆசிரியர் எழுதியுள்ளார்.

வடிவமைப்பு காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக குறியீட்டுக்கான உரிமை உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கமும் உண்டு, இணையக் குற்றங்களுக்கான சட்டங்களும், அதன் விபரங்களும் தரப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இணையதளங்கள், தமிழக காவல் துறையின் இணையக் குற்றப்பிரிவு பற்றியும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

-ஜெ.பி.,

நன்றி: தினமலர், 8/1/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *