தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 650ரூ.

அரசு அலுவலகங்களில் ஊழில் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகக் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முழு விவரங்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் நீதி மன்றத்தை அணுகாமலேயே வீட்டில் இருந்தபடி குறைந்த செலவில் நீதியைப் பெற முடியும் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது.

ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவலைக் கேட்டுப் பெற 30 நாட்கள் காத்திருக்கத் தேவை இல்லை, 48 மணி நேரத்திலேயே தகவலைக் கேட்டுப் பெற முடியும் என்பதை போன்ற நுணுக்கமான தகவல்கள் தரப்பட்டு இருக்கின்றன.

இந்த சட்டப்படி தகவலைப் பெற எவ்வாறு, யாரிடம் மனு கொடுப்பது போன்றவை கேள்வி பதில் ரூபத்திலும், இந்த சட்டம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு விவரங்களும் தந்து இருப்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்உள்ளதாக இருக்கும்.

நன்றி: தினத்தந்தி, 22/11/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *