விந்தன் படைப்புலகம்
விந்தன் படைப்புலகம், மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.200.
“கல்கியின் மாணவன்’ என்று போற்றப்படும் எழுத்தாளர் விந்தனின் படைப்புகள் இன்றும் பேசப்படுகின்றன. நகைச்சுவையாக எழுதுவது அவருடைய நோக்கமாக இருந்தது.
நாற்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன் எழுதிய ஒரே வரலாற்று நூல் எம்.கே.டி.பாகவதர் கதைதான். “தினமணி கதிர்’ இதழில் தொடராக வந்தது. விந்தனின் “ஆத்திசூடி’ வித்தியாசமானது. புரட்சி சிந்தனை உடையது.
நடிகர் எம்.ஆர். ராதாவைப் பேட்டி கண்டு “சிறைச்சாலை சிந்தனைகள்’ என்ற தொடர் வெளிவரவிந்தன் காரணமாக இருந்தார்.
“ஓ மனிதா!’ தொடர் அவருடைய சிறப்பான படைப்பு. ஒüவை முதல் ஆண்டன் செகாவ் வரை, கம்பன் முதல் கபீர்தாஸ் வரை இதில் வருவர். அவர்களுடைய எழுத்துகளும் வரும்.
“மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’, “பசி கோவிந்தம்’, “அன்பு அலறுகிறது’, “மனிதன் மாறவில்லை’ உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு உள்ளான நூல்களையும் எழுதியுள்ளார் விந்தன். “பாலும் பாவையும்’, “கண் திறக்குமா?’ – ஆகியவை போராட்டங்களைச் சந்தித்த நாவல்கள் வரிசையில் இடம் பிடிப்பவை.<br>
தமிழ்த்திரையுலகில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தார் விந்தன். கதை, வசனம், பாடல்கள் எழுதினார். “மனிதன்’ என்ற இதழையும் நடத்தினார்.
இலக்கியத்தில் பல புதுமைகள் செய்த விந்தனின் “குட்டிக் கதைகள்’ சிகரத்தைத் தொடும் சிந்தனை வடிவங்கள். பாரதக் கதையைப் “பாட்டில் பாரதம்’ என்ற தலைப்பில் தொடர் காவியமாக எழுதினார்.
விந்தனின் படைப்புகள் பற்றிய ஏராளமான விவரங்களுடன் கூடிய ஆய்வு நூல்.
நன்றி: தினமணி 15/11/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818