வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 400ரூ.

தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அச்சமூட்டும் வகையில் காடுகளில் மறைந்து வாழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை முழுமையாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் இந்த நூல் தயாராகி இருக்கிறது.
துணிந்து காட்டுக்குள் சென்று, மாயாவி என்று அழைக்கப்பட்ட வீரப்பனை முதல் முறை நேரடியாகச் சந்தித்து அவனது பிகைப்படத்தையும் பேட்டியையும் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த நூலின் ஆசிரியர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் சிறு வயது முதல், யானை வேட்டைக்காரனாக இருந்த அவன், சந்தனக் கடத்தல்காரனாக மாறியது எப்படி, தனக்கு எதிரான அதிகாரிகளை அவன் கொன்று குவித்து எவ்வாறு என்ற அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
முதல் அத்தியாயமே திகிலூட்டும் மர்மக் கதையைப் படிப்பதுபோன்ற உணர்வைத் தருகிறது. வீரப்பன் வரலாற்றின் முதல் பாகமான இந்தப் புத்தகம், அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டு இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 22/11/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030938_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818