சந்திரசேகரம்
சந்திரசேகரம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 312, விலை 175ரூ.
துறவு என்றால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது என்பது பொதுப்படையான அர்த்தம். எல்லாவற்றோடும் ஒன்றி இருப்பது என்பது, காஞ்சிப் பெரியவர் கொடுத்த விசேஷ அர்த்தம். காஞ்சிப் பெரியவர் என்பதை மட்டும், சில காகிதங்களில் அச்சிட்டு வெளியிட்டாலே, அதை வாங்கிப் படிக்கும் அளவுக்கு பக்தர்கள் பெருகிவிட்டனர் இன்று. இதில் நேர்முக வர்ணனையாக பெரியவரைப் பற்றிய செய்திகளையும், பெரியவர் கொடுத்த செய்திகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் இந்திரா சவுந்தர்ராஜன். ஒரு வகையில் இதை தெய்வத்தின் குரலுக்கு பாஷ்யம் என்றும் சொல்லலாம். ஒருமுறை படிக்கக்கூடிய புத்தகங்கள் உண்டு. ஒவ்வொரு முறை படிக்கும்போதும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புத்தகங்கள் உடு. சந்திரசேகரம் இரண்டாவது வகை. இந்தப் புத்தகத்தில் கூடுதலாக, திராவட இயக்கத்தைச் சேர்ந்த புலவருக்கு மடத்தில் கிடைத்த வரவேற்பு பற்றியும், திருப்பதியில் இருப்பது பெருமானா, முருகனா என்பது பற்றியும் சில சுவாரசியமான விவரங்கள் உண்டு. -சுப்பு. நன்றி: தினமலர், 24/8/2014.
—-
வட்டாச்சியர் அலுவலகத்தில் பட்டா பெறுவது எப்படி?, வக்கீல் பி. ரமேஷ், கிரி லா ஹவுஸ், சேலம், விலை 55ரூ.
பட்டா தொடர்பான சட்டங்களையும், விதிமுறைகளையும் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி எளிதாக, அதிக செலவில்லாமல் வட்டாசியர் அலுவலகங்களில் பட்டா பெறமுடியும், என்பது பற்றியும், தவறான பட்டா மாற்றத்தை ரத்து செய்வது பற்றியும் விரிவாக கூறப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/8/2014.