படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும்
படிக்கத்திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும், டாக்டர் எஸ்.எம்.பதூர் மொய்தீன், வி.சி.எஸ். சிராமன், சேலம், விலை 300ரூ.
குழந்தைகள் அனைவருமே நிறைய மதிப்பெண்கள் வாங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பாராட்டு வாங்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அனைவரது எண்ணங்களும் ஈடேறுவதில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 10 பேராவது படிக்கத் திணறுகிறார்கள். அப்படி படிப்பில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கென, அக்கறையெடுத்து, படிக்கத் திணறும் குழந்தைகளும் ஜெயிக்கும் என்ற இந்த நூலை மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறார் பிரபல மனநல மற்றும் குழந்தைகள் மருத்துவரான டாக்டர் எஸ்.எம். பகதூர் மொய்தீன். படிப்பில் குறைபாடுள்ள குழந்தைகள் ஏன் உருவாகிறார்கள் அவர்களை எப்படி கண்டறிவது, அவர்களை எப்படி ஜெயிக்க வைப்பது என்று பெற்றோர்களுக்கு கலங்கரை விளக்கம் போன்று பாடம் நடத்தியிருக்கிறார். இந்தக் குழந்தைகள்தான் புதுமையாக சிந்திப்பார்கள், இவர்கள்தான் நாளைய உலகை மாற்றி அமைப்பார்கள் என்று சொல்லும் மருத்துவர், அதற்கு உதாரணமாக எடிசன், ஐன்ஸ்டீன், நியூட்டன், பெல்ப்ஸ் போன்றவர்களை சுட்டிக்காட்டியிருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.
—-
அன்னை கதீஜா., யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 50ரூ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்களின் வரலாற்றைக் கூறும் நூல். முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர். தனது பெருஞ்செல்வத்தை இஸ்லாத்துக்காக செலவு செய்தவர். பெருமானாருடன் நெடுங்காலம் வாழ்ந்தவர் போன்ற பெருமைகளைப் பெற்ற அன்னை கதீஜாவின் வரலாற்றை சுருக்கமாகவும், எளிமையாகவும் எழுத்தாளர் சையத் இப்ராகீம் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/8/2014.