அப்துற்-றஹீம் ஆய்வுச் சரம்

அப்துற்-றஹீம் ஆய்வுச் சரம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 512, விலை ரூ. 450. இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், நபிமார்கள் வரலாறு, வலிமார்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதிய எம்.ஆர்.எம். அப்துற்-றஹீமின் படைப்புகள் தொடர்பாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட 45 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அப்துற் றஹீம் தனது நூல்களில் பதிவு செய்துள்ளபடி, ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள், மாற்றங்களை ஆய்வு செய்யும் ‘மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்’ என்ற கட்டுரை லிங்கனின் வாழ்க்கை வரலாற்றையே முழுமையாக விவரிக்கிறது. அப்துற் றஹீம் […]

Read more

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்

அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர், அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,  பக்.208, விலை ரூ.180. 1953 -1961 வரை அமெரிக்காவின் 34-வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஐஸன் ஹோவரின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ராணுவரீதியாக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்தியம்புகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பேரில் மூன்றாவதாகப் பிறந்த ஐஸன் ஹோவர் மிகுந்த மதக் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டார். ஆனால் ராணுவக் கல்லூரியில் பயிலும்போது, ஐஸன் ஹோவர் மிகவும் ஒழுங்கீனமாக நடந்தார். ராணுவத்தில் சேர்ந்த […]

Read more

மருத்துவ மன்னர்கள்

மருத்துவ மன்னர்கள்,  ஹெலன் கிலேப்ப சேட்டில், தமிழில்  அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை  ரூ.160. மருத்துவத் துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் மேயோ குடும்பத்தினர் குறித்து எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இது. கடந்த 1955-ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியான இந்நூல் தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் டாக்டர் வில்லியம் வாரல் மேயோவும், அவரது மகன்களான டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் மேயோ மற்றும் சார்லஸ் ஹொரே மேயோவும் கட்டமைத்த மாபெரும் மருத்துவ சாம்ராஜ்யத்தின் கதைதான் இந்நூல். ஒரு மருத்துவக் […]

Read more

ஒரு துணைவேந்தரின் கதை

ஒரு துணைவேந்தரின் கதை, தன் வரலாறு – பாகம் -3, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,பக்.512, விலை ரூ.400. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராக இருந்த நூலாசிரியரின் தன் வரலாற்று நூலின் மூன்றாம் பாகம் இந்நூல். அவருடைய ஆராய்ச்சிப் படிப்புக்காக கனடா சென்றது, ஆராய்ச்சிப் படிப்பு முடித்து சென்னைக்குத் திரும்பி வந்து கிண்டி பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியர் பதவி, முதுநிலைப் பேராசிரியர் பதவி வகித்தது, இயக்குநரானது வரையிலான நூலாசிரியரின் அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. கனடாவில் இருந்து சென்னைக்கு வந்த பின்பு வேலை கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அப்போது […]

Read more

இஸ்லாமும் வீரசைவமும்

இஸ்லாமும் வீரசைவமும், டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 140ரூ. இஸ்லாத்தின் கொள்கைகளும், நடைமுறைகளும் தென்னக மக்களைப் பெரும் மாற்றங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் கொண்டுசென்றன. இதன் விளைவாக சமய மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வீரசைவம் தோன்றியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவண்ணர், வீரசைவத்திற்குப் புத்துயிர் அளித்தார். அவர் ஒரு சமூகப் போராளியாக – வீரசைவம் என்ற பதாகையின் கீழ் இந்திய நாட்டின் சமூக அமைப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பசவண்ணரின் சமூகப்புரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது, இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச்சிறப்பான கொள்கைகளும், நடைமுறைகளும் என்பது ஆராய்ச்சியாளர்களின் […]

Read more

நூறு பேர்

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை, நூறு பேர், மைக்கேல் ஹெச்.ஹார்ட், தமிழில் இரா.நடராசன், மோ.வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா, மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.672, விலை ரூ.375. உலக அளவில் புதிய வரலாறு படைத்த நூறு பேரை வரிசைப்படுத்தி, அவரவர்களுக்குரிய இடத்தை அந்த வரிசையில் முன் பின்னாகக் கொடுத்து மதிப்பிட்டிருக்கும் நூல். முஹம்மத், ஐசக் நியூட்டன், ஏசு கிறிஸ்து, புத்தர் எனத் தொடங்கும் இந்த வரிசை ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், சார்லஸ் டார்வின், அலெக்சாண்டர் கிரகாம்பெல் , ஜார்ஜ் வாஷிங்டன், கார்ல்மார்க்ஸ், […]

Read more

ஒரு துணை வேந்தரின் கதை

ஒரு துணை வேந்தரின் கதை, டாக்டர் சே. சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பாகம் 1, விலை 400ரூ, பாகம் 2, விலை 350ரூ. நிறைய வேலை – குறைய வேலை என்பது என் ஏட்டில் இருந்ததில்லை – இப்போதும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம், ‘வேலை’ என்பது தான். வேலையை வேலை என்று பார்த்தால் அது ஒரு பாரம், பளு. வேலையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அங்கே வேதனை இருப்பதில்லை. வேகம் வரும். அது மகிழ்ச்சி தரும். ஒரு ஆத்ம திருப்தி மலரும். இதுவே என் […]

Read more

ஒரு துணைவேந்தரின் கதை

  ஒரு துணைவேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், முதல்பாகம் விலை 400ரூ, இரண்டாம் பாகம் விலை 350ரூ. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக், தனது வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைத் தொகுத்து கதை போல எழுதி இருக்கிறார். முதல் பாகத்தில் இளமைக் காலப் பள்ளிப் படிப்பு முதல் பி.இ.படிப்பில் சேரும் வரையிலான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இரண்டாம் பாகத்தில் பொறியியல் மாணவராகவும், ஆசிரியராகவும் இருந்த காலகட்டத்தை விளக்கியுள்ளார். எழுத்து, மொழி, பேச்சு மொழி இவ்விரண்டையும் கையாண்டு மிகச் சாதாரண நடையில் பாமரரும் […]

Read more

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா, மஹதி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ. முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’ எழுதிய நூல். முதல் பகுதியில் ‘விடுதலைப் போரில் வீர முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் கான் சாகிபின் கடைசி நாட்கள், திப்பு சுல்தான் கடைசி நாட்கள், முதல் புரட்சி, மலையாள மாப்பிளைமார் புரட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில், ‘முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா’ என்ற தலைப்பில், இந்தியா மற்றும் தென்னகத்தில் நடந்த முஸ்லிம்கள் ஆட்சி பற்றியும், அதனால் விளைந்த நன்மைகள் குறித்தும் எழுதியுள்ளார். குற்றவாளி கூண்டில் அவுரங்கசீப், ஹைதர் […]

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, அப்துற் – றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 680, விலை 300ரூ. குர்ஆனில் கூறப்பட்டுள்ள இருபத்தி நான்கு நபிமார்களின் வரலாறுகளையும், திருத்தூதர்கள் செய்த இறை பணியையும், நல்வழிகளையும் குறிப்பிட்டு சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 25/6/2017.

Read more
1 2 3