ஒரு துணைவேந்தரின் கதை
ஒரு துணைவேந்தரின் கதை, சே.சாதிக், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், முதல்பாகம் விலை 400ரூ, இரண்டாம் பாகம் விலை 350ரூ.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சே.சாதிக், தனது வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைத் தொகுத்து கதை போல எழுதி இருக்கிறார். முதல் பாகத்தில் இளமைக் காலப் பள்ளிப் படிப்பு முதல் பி.இ.படிப்பில் சேரும் வரையிலான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இரண்டாம் பாகத்தில் பொறியியல் மாணவராகவும், ஆசிரியராகவும் இருந்த காலகட்டத்தை விளக்கியுள்ளார். எழுத்து, மொழி, பேச்சு மொழி இவ்விரண்டையும் கையாண்டு மிகச் சாதாரண நடையில் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூலைப் படித்திருக்கிறார். அவரது நினைவாற்றல் நம்மை வியக்க வைக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 24/1/2018.