எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0,
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ.
உணர்வு மேலாண்மை என்ற எமோஷனல் இன்டெலிஜென்ஸ் புத்தகத்தில் மனிதர்களிடையே நட்பை ஏற்படுத்த தேவைப்படும் குணாதிசயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நமக்கு ஏற்படும் விதவிதமான உணர்வுகளை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்ற வழியையும் இந்த நூல் கற்றுத்தருகிறது.
அத்துடன், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான வழிகளும் கற்றுத்தருகிறது. மன்னிப்பின் அவசியத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் மேலான மன அழுத்தத்தை குறைக்கும் நூலாக இது அமைகிறது.
நன்றி: தினத்தந்தி, 24/1/2018.