அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர்
அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர், அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.208, விலை ரூ.180.
1953 -1961 வரை அமெரிக்காவின் 34-வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஐஸன் ஹோவரின் வாழ்க்கை வரலாற்றையும், குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ராணுவரீதியாக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் இந்நூல் விரிவாக எடுத்தியம்புகிறது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பேரில் மூன்றாவதாகப் பிறந்த ஐஸன் ஹோவர் மிகுந்த மதக் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டார். ஆனால் ராணுவக் கல்லூரியில் பயிலும்போது, ஐஸன் ஹோவர் மிகவும் ஒழுங்கீனமாக நடந்தார். ராணுவத்தில் சேர்ந்த பிறகு அதை மாற்றிக் கொண்டு, இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கும் அளவுக்கு தனது திறமையால் உயர்ந்தார்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் பிடியிலிருந்த பிரான்ûஸ விடுவிப்பதற்காக பிரிட்டனும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து, ஜெர்மன் ஆக்கிரமிப்பு பிரான்ஸ் மீது போர்தொடுத்தது. இக்கூட்டுப் படைகளுக்கு தலைமை வகித்து ராணுவ ரீதியாக ஐஸன் ஹோவர் ஆற்றிய பணிகள் குறித்து இந்நூல் விரிவாக விளக்குகிறது.
மக்களின் பேராதரவுடன் அமெரிக்க ஜனாதிபதியான அவர், எப்போதும் சமாதானத்தையே விரும்பினார். “அமெரிக்க இளைஞர்களுக்கு மூன்றாம் உலகப்போரை தவிர்க்க பயிற்சி அளிக்க வேண்டுமேயன்றி இரண்டாம் உலக யுத்தத்தை திரும்பவும் கொண்டு வர பயிற்சி அளிக்கக் கூடாது’ என்று குறிப்பிடும் ஐஸன் ஹோவரின் வரலாறு, இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நன்றி: தினமணி, 3/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%90%e0%ae%b8%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818