பெண் வாசனை
பெண் வாசனை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.260.
பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு எல்லாம் இடம்பெற்றிருக்கின்றனர் என்பதையும், வாய்மொழிக் கதைகளில் இடம்பெற்றுள்ள தன்மையையும் எடுத்துரைக்கும் நுால்.
பொம்பளை சிரிச்சா போச்சு, பெண்புத்தி பின்புத்தி, உண்டி சுருங்கல் பெண்டிருக்கு அழகு, பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா? போன்ற பழமொழிகளையும், வேறு பலவற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்.
விடுகதைகளை விளக்கும் இடத்தில் மேலோட்டமாகப் புரியும் பொருளையும், உள்ளார்ந்து உணர்த்தப்படும் பொருளையும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் உருவாக்கத்தில் உருவாகும் இந்த விடுகதைகளில் உறைந்து கிடக்கும் பொருள் வலிமை சிந்திக்க வைக்கிறது.
பெண் தெய்வங்கள் தொடர்பான வழக்காறுகள், கதைகள் சாமியாட்டம் என்னும் கலையில் பெண்களின் பங்களிப்பையும் உரைக்கிறது இந்த நுால்.
– முகிலை ராசபாண்டியன்.
நன்றி: தினமலர், 28/11/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818