முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா
முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா, மஹதி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ.
முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’ எழுதிய நூல். முதல் பகுதியில் ‘விடுதலைப் போரில் வீர முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் கான் சாகிபின் கடைசி நாட்கள், திப்பு சுல்தான் கடைசி நாட்கள், முதல் புரட்சி, மலையாள மாப்பிளைமார் புரட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இரண்டாம் பகுதியில், ‘முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா’ என்ற தலைப்பில், இந்தியா மற்றும் தென்னகத்தில் நடந்த முஸ்லிம்கள் ஆட்சி பற்றியும், அதனால் விளைந்த நன்மைகள் குறித்தும் எழுதியுள்ளார். குற்றவாளி கூண்டில் அவுரங்கசீப், ஹைதர் அலி, முகம்மது பின் காசிம் ஆகியோரை நிறுத்தி கேள்வி கேட்பது சுவையாக உள்ளது.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.