முதலீட்டு மந்திரம் 108
முதலீட்டு மந்திரம் 108, நாணயம் விகடன் சி.சரவணன், விகடன் பிரசுரம், விலை 150ரூ.
பணத்தை எதில் முதலீடு செய்தால் லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்று விவரிக்கிறது இந்த நூல். ஒருவர் மாதம் ரூ.1000 வீதம் 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் கோடீசுவரர் ஆகலாம் என்று கூறுகிறார், இந்த நூலின் ஆசிரியரும், “நாணயம் விகடன்” இதழின் முதன்மை பொறுப்பாசிரியருமான சி. சரவணன்.
சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறுவதுடன் 108 முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறார். பொருளாதாரம் பற்றிய முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளவும், முதலீட்டுக்கு அதிக லாபம் அடைவதற்கான வழிவகைகளை தெரிந்து கொள்ளவும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.