தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம்,

முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இந்த இரு நூல்களில் முதலாவது முற்றிலும் ஆங்கிலமாகும். எம்பெருமான் நடம்புரிந்த பெருமைகளை பல்வேறு பெரும் மகான்கள் பாடியும், எழுதியும் வைத்திருக்கின்றனர். திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை அத்வைத நெறிக்கு ஆதாரமான இடம்.

சைவநெறியைக் காட்டும் கலங்கரை விளக்கம். புராணங்கள், நாயன்மார்கள் பாடல்கள் உட்பட பல, சிவனை வழிபட்டால், சிந்தை தெளிய வழி உண்டு என்கின்றன. ஆகவே, மங்கலத்தை நமக்கு தருபவன் சிவன் என்ற கோட்பாடுகளை ஆசிரியர் இதில் விளக்குகிறார்.

தில்லைத் திருத்தலத்தை பற்றிய மற்றொரு நூல் தமிழில் அமைந்திருக்கிறது. பார்க்கப் பரவசம் தரும் நடராசர் சிலை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ததால், இந்த இரு நூல்களை எழுதியுள்ள சந்திரிகா பத்திரிகைத்துறையில் தடம் பதித்தவரும் கூட.

இப்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள ‘தமிழ் ஆஸ்திரேலியன்’
ஆசிரியராக உள்ள இவர் சட்டம் படித்தவர். இவரைப்பற்றி தமிழகத்தைச் சேர்ந்த கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் எழுதிய கருத்துக்கள் தமிழ் நூலில் சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றன.

இந்த இரு நூல்களைப் படித்தால், ஆசிரியர் சந்திரிகா தென்னாடுடைய சிவன் பால் வைத்திருக்கும் நேசம் நன்கு புரியும்.

நன்றி: தினமலர், 8/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *