வீடுதோறும் வெற்றி
வீடுதோறும் வெற்றி, டாக்டர் ந. சேதுராமன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 375ரூ.
ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து டாக்டராக, தொழில் அதிபராக, அரசியல் கட்சித் தலைவராக வாழ்க்கையில் வெற்றி பெற்ற கதையை டாக்டர் ந.சேதுராமன் இந்த நூலில் சுவைபடச் சொல்கிறார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டபோதிலும் நாணயமாக இருந்து நாணயம் சம்பாதித்ததைக் கூறுகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறார். இந்த நூலைப் படித்துப் பார்த்தால் ஒரு சாதாரண மனிதர் படைத்த சாதனையைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் எப்படிச் சாதிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். வாழ்க்கையில் வெல்லத்துடிப்பவர்களுக்கு இந்த நூல் வழிகாட்டும் கலங்கரை விளக்கும். நன்றி: தினத்தந்தி, 28/10/2015.
—-
காலத்தை வென்ற காந்திய மகரிஷி, டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப்பண்ணை, விலை 50ரூ.
நாம் வாழ்கின்ற வாழ்க்கை முறையில்தான் நமது சிறப்பு இருக்கின்றது. தன்பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவன் பயனற்றவன். யார் வையகம் வாழ வேண்டுமென்று எண்ணி அதற்கேற்பத்தனது வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்கின்றானோ, அவன் வாழ்க்கைதான் பண்பும் பயனும் உடையதாக இருக்கும் என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டிய மாமனிதர் மகரிஷி க. அருணாசலம். அவரது வாழ்க்கை வரலாற்று சுருக்கமே இந்நூல். நன்றி: தினத்தந்தி, 28/10/2015.