வாழ்வே ஒரு மந்திரம்

வாழ்வே ஒரு மந்திரம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.280, விலை ரூ.260. ஒரு நூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால் அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை யாராவது கொடுத்தால் பருகத் தயார் என்ற நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் உள்ளனர். அத்தகையோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள தகவல் திரட்டுதான், இந்த நூல். திருமந்திர கருத்துகளை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.  எட்டு தலைப்புகளில் ஏராளமான […]

Read more

யாரோ சொன்னாங்க

யாரோ சொன்னாங்க, மணவை பொன் மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. வாட்ஸ்-அப், முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் அவ்வப்போது சிறப்பான கருத்துகள் வெளியாகின்றன. இதுபோன்று, மேலும் பல இடங்களில், யார் சொன்னார்கள் என்ற அடையாளம் இல்லாமல், மக்களுக்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைக் கருத்துகள் வெளியாகின்றன. அந்த சிறப்பான வரிகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. சிந்தனைக்கு விருந்தாகவும், தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் வகையிலும் இந்தக் கருத்தகள் அமைந்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031625_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம், என் மண் சார்ந்த காதலும் கலாச்சாரமும் (குறுங்காவியம்), மணவை பொன் மாணிக்கம்;, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.150.   உலகில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து காதலும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் காதலின் தன்மையும் காதலிப்பவர்களின் தன்மையும் மாறிக் கொண்டே வந்தாலும், காதல் எப்போதும் நிலைத்திருக்கிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கதைகளில் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிற பல காதலர்களைச் சந்திக்கலாம். நம்மோடு பழகுகிறவர்களை அவர்களில் உணரலாம். ஆனால் அவர்கள் நம்மிடம் அம்பிகாபதி – அமராவதி, பிருதிவிராஜ் – […]

Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும், இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. மனிதநேயப் பண்புகளை மதித்துப் போற்றும் நூலாக இதனை ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு எழுதி இருக்கிறார். இளமைக் காலம் முதல் அவரது வாழ்வில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை உணர்ச்சிகரமான வார்த்தைகளால் நம்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். அவர்கள் காட்டிய அன்பின் வெளிப்பாடும், அவற்றை ஆசிரியர் மன நிறைவோடு நினைவு கூர்ந்து இருப்பதும் உள்ளத்தை தொடுகின்றன. இந்தப் புத்தகத்தைக் கை தவறி கீ போட்டுவிடாதீர்கள். இதில் இருக்கிற எளிய மனிதர்களுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுவிடலாம் […]

Read more

தமிழருவி மணியன் சிறுகதைகள்

தமிழருவி மணியன் சிறுகதைகள், தமிழருவிமணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.144, விலை ரூ.130. நூலாசிரியரின் ஆறு சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு. “ஒற்றைச் சிறகு’ சிறுகதையின் நாயகன் குமரேசன், சரியோ தவறோ கொடுப்பவனாகவே இறுதிவரை இருக்க வேண்டும் என்று பிடிவாதம் கொண்டவர். “தவறான வாழ்க்கைப் புரிதலோடு ஒடுங்கிப் போய்விட்டான்’ என்று அவருடைய மரணத்தின்போது வேதனைப்படுகிறார் அவருடைய ஆப்த நண்பர் ஆனந்தமூர்த்தி. கைம்மாறு கருதாத அன்பு இந்த உலகத்தில் உண்டா என்ற கேள்விக்கு விடை காண முயலும் படைப்பு. மதுவினால் குலைந்துபோகும் குடும்பத்தைக் கண்முன் நிறுத்துகிறது, […]

Read more

மனத்தில் மலர்ந்த மடல்கள்

மனத்தில் மலர்ந்த மடல்கள், இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், பக்.64, விலை ரூ.40. அஞ்சல் மூலம் கடிதம் எழுதுவது அறவே இல்லாமல் போன நிலையில், தன்னுடைய மனத்தில் மலர்ந்த மடல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு தந்தை என்கிற முறையில் மகன்களுக்கு, கொஞ்சம் வயதானவர் என்கிற முறையில் கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு, பழைய விடுதி மாணவன் என்கிற முறையில் வீட்டில் இருந்து விடுதிக்குப் புலம்பெயர்ந்த இளம் நண்பர்களுக்கு, தகப்பன் என்ற நிலையிலிருந்து இன்றைய மாணவர்களுக்கு, பெற்றோர் என்ற நிலையில் இன்றைய […]

Read more

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்,  வி.ரவி, கற்பகம் புத்தகாலயம்,  பக்.296,  விலைரூ.250. குறிப்பிட்ட ஜாதகத்துக்குரிய ஒருவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்கு ஜாதகத்திற்குத் தகுந்தாற்போல் காரணத்தை அறிந்து, பரிகார சாந்தி செய்து, இறைவனை வழிபட அவர்களின் குறைகள் தகர்க்கப்பட்டு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதை கிரக நிலைகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் விளக்குகிறது. தனியார் வேலை, சுய தொழில் முன்னேற்றம் பெறும் ஜாதகங்கள் மற்றும் பற்பல ஜோதிட ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஜாதகக் கணக்கை அறிதல், ஜாதகக் கலையின் […]

Read more

மனத்தில் மலர்ந்த மடல்கள்

மனத்தில் மலர்ந்த மடல்கள்,  இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், பக்.64, விலை ரூ.40; அஞ்சல் மூலம் கடிதம் எழுதுவது அறவே இல்லாமல் போன நிலையில், தன்னுடைய மனத்தில் மலர்ந்த மடல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு தந்தை என்கிற முறையில் மகன்களுக்கு, கொஞ்சம் வயதானவர் என்கிற முறையில் கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு, பழைய விடுதி மாணவன் என்கிற முறையில் வீட்டில் இருந்து விடுதிக்குப் புலம்பெயர்ந்த இளம் நண்பர்களுக்கு, தகப்பன் என்ற நிலையிலிருந்து இன்றைய மாணவர்களுக்கு, பெற்றோர் என்ற நிலையில் இன்றைய […]

Read more

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்,  வி.ரவி, கற்பகம் புத்தகாலயம்,  பக்.296, விலைரூ.250; குறிப்பிட்ட ஜாதகத்துக்குரிய ஒருவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்கு ஜாதகத்திற்குத் தகுந்தாற்போல் காரணத்தை அறிந்து, பரிகார சாந்தி செய்து, இறைவனை வழிபட அவர்களின் குறைகள் தகர்க்கப்பட்டு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதை கிரக நிலைகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் விளக்குகிறது. தனியார் வேலை, சுய தொழில் முன்னேற்றம் பெறும் ஜாதகங்கள் மற்றும் பற்பல ஜோதிட ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஜாதகக் கணக்கை அறிதல், ஜாதகக் கலையின் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை,  இறையன்பு, கற்பகம் புத்தகாலயம்,  பக்.232, விலை ரூ.200. நூலாசிரியர் இந்திய ஆட்சிப்பணியின்போது தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு 10 தலைப்புகளில் கட்டுரைகளாக வடித்து நூலாகத் தந்துள்ளார். பெருக்கெடுக்கும் வார்த்தை பிரவாகம், பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையான நடை நம்மைக் கவர்கிறது. பணியில் சிறக்க' என்ற தலைப்பில், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பற்றிய ஒப்பீடு, நிறுவனத்தின் வளர்ச்சி, நிறுவனம் சிறக்க ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், கடும் உழைப்புத் திறன் ஆகியவை குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளார். […]

Read more
1 2 3 7