ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம், என் மண் சார்ந்த காதலும் கலாச்சாரமும் (குறுங்காவியம்), மணவை பொன் மாணிக்கம்;, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.150.

 

உலகில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து காதலும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் காதலின் தன்மையும் காதலிப்பவர்களின் தன்மையும் மாறிக் கொண்டே வந்தாலும், காதல் எப்போதும் நிலைத்திருக்கிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கதைகளில் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிற பல காதலர்களைச் சந்திக்கலாம். நம்மோடு பழகுகிறவர்களை அவர்களில் உணரலாம்.

ஆனால் அவர்கள் நம்மிடம் அம்பிகாபதி – அமராவதி, பிருதிவிராஜ் – சம்யுக்தா, ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஷாஜகான் – மும்தாஜ் காதல் ஜோடிகளாகவே நூலாசிரியரால் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

வழக்கமான சிறுகதைகளுக்கு உரிய எந்த உத்தியும், அழகியல் கோட்பாடுகளும் கடைப்பிடிக்கப்படாமல், இயல்பான மனிதர்களை அவர்களின் இயல்பு கெடாமல் மிக அழுத்தமாகச் சித்திரிப்பதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்நூலைப் படிக்கும் “காதலின் எதிரிகள்’, காதலை ஆதரிப்பவர்களாக மாறிவிடுவார்கள் என்பது உறுதி.

நன்றி: தினமணி, 25/10/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.