வாழ்வே ஒரு மந்திரம்

வாழ்வே ஒரு மந்திரம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.280, விலை ரூ.260. ஒரு நூறு சமயக் கிரந்தங்களையும், அவற்றிற்கான ஓராயிரம் வியாக்கியானங்களையும் வாசிக்கவும் யோசிக்கவும் எங்களுக்கு நேரமில்லை; ஆனால் அவற்றிலிருந்து வடித்தெடுத்த சாரத்தை யாராவது கொடுத்தால் பருகத் தயார் என்ற நிலையில்தான் இன்று பெரும்பாலானவர்கள் உள்ளனர். அத்தகையோரின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ள தகவல் திரட்டுதான், இந்த நூல். திருமந்திர கருத்துகளை மையமாகக் கொண்டு இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.  எட்டு தலைப்புகளில் ஏராளமான […]

Read more