அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்
அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள், வி.ரவி, கற்பகம் புத்தகாலயம், பக்.296, விலைரூ.250.
குறிப்பிட்ட ஜாதகத்துக்குரிய ஒருவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்கு ஜாதகத்திற்குத் தகுந்தாற்போல் காரணத்தை அறிந்து, பரிகார சாந்தி செய்து, இறைவனை வழிபட அவர்களின் குறைகள் தகர்க்கப்பட்டு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதை கிரக நிலைகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் விளக்குகிறது.
தனியார் வேலை, சுய தொழில் முன்னேற்றம் பெறும் ஜாதகங்கள் மற்றும் பற்பல ஜோதிட ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஜாதகக் கணக்கை அறிதல், ஜாதகக் கலையின் அதிபதி ஈஸ்வரன், 12 ராசிகளும் கிரகங்களின் ஆட்சி வீடும் உள்பட பல்வேறு தலைப்புகளிலான ஆய்வுக் கட்டுரைகள் ஜாதகம் கற்போருக்கு பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் பிறந்த, ஒரே லக்னம், ஒரே ராசியுடைய ஜாதகர்கள் ஒரே மாதிரியான பலன்களை அனுபவிப்பது கிடையாது. ஜாதகர்கள் குடியிருக்கும் இடத்தின் வாஸ்து சாஸ்திர அமைப்பிற்கேற்ப வாழ்க்கை பலன்களில் மாற்றம் ஏற்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.
எண்ணமும் செயலும், ஆற்றலும் விடாமுயற்சியும், தானமும் தர்மமும் நேர்மையான வழியில் இருந்தால் இவ்வுலகினை வெல்லலாம் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
நன்றி: தினமணி, 15/3/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031304_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
ந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818