மண்ணும் மக்களும்
மண்ணும் மக்களும், இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ.
மனிதநேயப் பண்புகளை மதித்துப் போற்றும் நூலாக இதனை ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு எழுதி இருக்கிறார். இளமைக் காலம் முதல் அவரது வாழ்வில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை உணர்ச்சிகரமான வார்த்தைகளால் நம்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். அவர்கள் காட்டிய அன்பின் வெளிப்பாடும், அவற்றை ஆசிரியர் மன நிறைவோடு நினைவு கூர்ந்து இருப்பதும் உள்ளத்தை தொடுகின்றன.
இந்தப் புத்தகத்தைக் கை தவறி கீ போட்டுவிடாதீர்கள். இதில் இருக்கிற எளிய மனிதர்களுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுவிடலாம் என்று அவர் தெரிவித்து இருப்பதில் இருந்து, அனைவரையும் எந்த அளவு நேசித்தார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 14/2/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818