தமிழருவி மணியன் சிறுகதைகள்
தமிழருவி மணியன் சிறுகதைகள், தமிழருவிமணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.144, விலை ரூ.130.
நூலாசிரியரின் ஆறு சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு.
“ஒற்றைச் சிறகு’ சிறுகதையின் நாயகன் குமரேசன், சரியோ தவறோ கொடுப்பவனாகவே இறுதிவரை இருக்க வேண்டும் என்று பிடிவாதம் கொண்டவர். “தவறான வாழ்க்கைப் புரிதலோடு ஒடுங்கிப் போய்விட்டான்’ என்று அவருடைய மரணத்தின்போது வேதனைப்படுகிறார் அவருடைய ஆப்த நண்பர் ஆனந்தமூர்த்தி. கைம்மாறு கருதாத அன்பு இந்த உலகத்தில் உண்டா என்ற கேள்விக்கு விடை காண முயலும் படைப்பு.
மதுவினால் குலைந்துபோகும் குடும்பத்தைக் கண்முன் நிறுத்துகிறது, “பாவமன்னிப்பு’ சிறுகதை. பெற்றோரிடம் இன்றைய பிள்ளைகளுக்கு இருக்கும் பாசமற்ற உறவைச் சித்திரிக்கிறது “தனிமைத்துவம்’ சிறுகதை. பிள்ளைப் பேறின்மையால் பிரிந்து செல்கிற கணவன் மீண்டும் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்கிறானா இல்லையா என்பதுதான் “தாயுமானவள்’ சிறுகதையின் சாரம்.
மணமாகாமல் சேர்ந்து வாழும் கலாசாரத்தில் உள்ள சிக்கல்களை விவரிக்கிறது “கனவுப்பூ’.
ஜாதி பிரச்னையின் காரணமாக விரும்பியவளை மணம் முடிக்க இயலாத நாயகன் சமூக சேவையில் ஈடுபடுகிறான். 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் மனம் கவர்ந்தவளின் சிதிலமடைந்த வீட்டையே காண்கிறான். அவளைப் பெண் பார்க்கும் படலத்தின்போது நாணத்துடன் அவள் “பிடிச்சிருக்கு’ என்று சொன்ன ஒன்றைச் சொல் கதையின் தலைப்பான “நிசப்த சங்கீதமாய்’ அவன் காதில் ஒலிக்கிறது.
தொகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுகதைகளும் அன்பை மையமாகக் கொண்டு அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 25/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818