அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும்
அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும், சிலம்பு நா.செல்வராசு, அனிச்சம் வெளியீடு, விலைரூ.20.
கோவை ஞானி – சிலம்பு செல்வராசு இடையே நடந்த கடித தொடர்பு விபரம் முதற்பகுதியாகவும், தமிழின் ஆக்கம் தடையும் விடையும் என்ற கட்டுரை இரண்டாம் பகுதியாகவும் அமைந்த குறுநுால். காரசார விவாதத்துக்குரிய நுால்.
தமிழின உள் முரண்பாடுகள் குறித்தும், இனவரைவியல் குறித்தும் பேசும் கட்டுரை கவனிக்கத்தக்க ஒன்றாகும். தமிழர் வாழ்வியல் சடங்குகளில் செய்த மாற்றங்கள், எத்தகு பயனை விளைவித்து வருகின்றன என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரை குறிப்பிடத்தக்கது.
தமிழின ஆக்கத்திற்கான தடைகள் எவையும் வெளியில் இல்லை. அவை தமிழினத்தின் உள்ளேயே புரையோடி உள்ளன என்னும் கருத்து, நுாலில் முத்தாய்ப்பாகத் திகழ்கிறது.
– ராமலிங்கம்நன்றி: தினமலர், 28.3.21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818