எனக்குரிய இடம் எங்கே

எனக்குரிய இடம் எங்கே?, ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ.

கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியர் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே?

இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார். மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஏதுவாக எளிமையான புரிந்துணர்வில் கட்டுரைகள்.

வகுப்பறை, மாணவர்களிடம் கற்போம், எனக்குரிய இடம் எங்கே என மூன்று பெரும் தலைப்புகளில் விரியும் கட்டுரைகள் ஏதோ ஆவணம்போல் விரிந்துவிடும் அபாயத்தை எட்டி விடாமல் நாவல் போன்று படித்துணரத் தூண்டுகிறார். ஆசிரியர், மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான புத்தகம்.

நன்றி: குங்குமம், 05/8/2016.

Leave a Reply

Your email address will not be published.