நூறு வயது வாழ நூறு உணவுகள்
நூறு வயது வாழ நூறு உணவுகள், ஆர். வி. பதி. அழகு பதிப்பகம், விலை 140ரூ.
நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. அப்படிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் பழங்கள், கீரைவகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற நூறு வகையான உணவு முறைகளையும், அதன் பயன்பாடுகளையும் இந்த நூலில் ஆர். வி. பதி எடுத்துக்கூறியுள்ளார். நோய்கள் வராமல் தடுக்கவும், உடலைச் சீராக வைத்துக் கொள்ளவும் இந்த நூல் பெரிதும் பயன்படும்.
நன்றி: தினத்தந்தி, 22/6/2016.
—-
கிச்சன் டூ கிளினிக், அங்கு ஹீலர் அ. உமர்பாரூக், சூரியன் பதிப்பகம், விலை 140ரூ.
சமையலறையை சுத்தமாக வைத்திருக்க உதவுவதுடன், ஆராக்கிய வழிகாட்டியாகவும் இருப்பது இந்த நூலின் சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 22/6/2016.