தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2, கோமல் அன்பரசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 132, விலை 120ரூ. இரண்டாம் பாகமாக இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச் சுட வந்துள்ளது, ‘தமிழ்நாட்டு கொலை வழக்குகள்!’ பல நேரங்களில் செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என ஆசிரியர் கோமல் அன்பரசன் தன், ‘என்னுரை’யில் குறிப்பிட்டு, உண்மை தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார். ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் […]

Read more

பழைய சோறு

பழைய சோறு, கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 70ரூ. புதிய கோணம் புதிய தகவல்களுடன் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் கோமல் அன்பரசன் எழுத்தில் பழைய சோறு நூல் உருவாகி இருக்கிறது. பழைய சோறு உணவு என்பதை தாண்டி ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியலோடு கலந்த கலாச்சார குறியீடு. இத்தகைய பழைய சோற்றால் உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன் சொக்கவைக்கும் நடையில் கவளம் கவளமாக தாயன்போடு நம் கைகளில் தருகிறார்கள். அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் எழுதப் பட்டிருப்பதால் படிப்பவருக்கு பழைய-சோறு […]

Read more

காவிரி அரசியல்

காவிரி அரசியல், கோமல் அன்பரசன், தமிழ் திசை வெளியீடு, உரிமைப் போராட்ட வரலாறு நீதிக்கான போராட்டத்தில் காவிரியின் கடைமடையான தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பகிர்வு சிக்கலுக்கான காரணங்கள், அதைக் களைவதற்கான முயற்சிகள், அவற்றின் வெற்றி-தோல்விகளை விரிவாக இந்நூலில் பேசுகிறார் ஊடகவியலாளரும் காவிரிக் கரையைச் சேர்ந்தவருமான கோமல் அன்பரசன். காவிரி நதிநீருக்கான உரிமைப் போராட்ட வரலாற்றைப் பேசுகிறது! நன்றி: தமிழ் இந்து, 20/4/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

ரகசியமான ரகசியங்கள்

ரகசியமான ரகசியங்கள், கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. தினத்தந்தியின் முத்துச்சரத்தில் தொடராக வந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவைப் பெற்ற “ரகசியமான ரகசியங்கள்” அரிய புகைப்படங்களுடன் புத்தகமாகி இருக்கிறது. ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற தளங்களில் இயங்கும் கோமல் அன்பரசன் எழுதிய வரலாற்று ஆய்வுகளில் இது முக்கியமானதாக திகழ்கிறது. பல ஆளுமைகளைப் பற்றி காலத்தில் காலடியில் மறைந்து கிடந்த, மறைக்கப்பட்ட ரகசியங்களைத் தன் சொக்கவைக்கும் நடையில் இந்நூலில் அவர் தந்திருக்கிறார். வரலாறு என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பில்லாமல் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பாக […]

Read more

தமிழ்நாட்டு நீதிமான்கள்

தமிழ்நாட்டு நீதிமான்கள், கோமல் அன்பரசன், சூரியன் பதிப்பகம், விலை 190ரூ. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறை வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

நம்பிக்கை நாயகன்

நம்பிக்கை நாயகன், ராம.ஹேமமாலினி, சென்னை புக்ஸ், விலை 50ரூ. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற். அவரது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய பிறரின் கண்ணோட்டங்கள், பேட்டிகள் ஆகியவற்றை பதிவு செய்திருக்கும் நூல்.மோடி மிகப்பெரிய சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். ஆனால் அவற்றை தனக்குச் சாதகமான வாய்ப்புக்காக மாற்றிக்கொண்டது எப்படி, அரசியல் பின்புலமோ செல்வமோ செல்வாக்கோ பாரம்பரியமோ ஏதுமின்றி பிரதம வேட்பாளர் வரை முன்னேறியது எப்படி, ஏழைக் குடும்பத்தில் பிறந்த மோடி, தன்னிகரில்லா தேசியத் தலைவராக உயர்ந்தது எவ்வாறு? இவற்றுக்கு விடை […]

Read more

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய விவரங்கள் தினசரி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் எழுதியுள்ள இந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வழக்கின் தன்மை, சட்ட விளக்கங்கள், அன்றாட நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நடந்த சுவையான வாதங்கள் அனைத்தையும் ஒரு சாதாரண வாசகன் புரிந்துகொள்ளும் விதத்தில் விரிவாக அன்பரசன் எழுதியுள்ளார். 1991 முதல் 1996 ஜெயலலிதா தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தார். […]

Read more

கொலை கொலையாம் காரணமாம்

கொலை கொலையாம் காரணமாம், கோமல் அன்பரசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 140ரூ. தமிழகத்தை உலுக்கிய வழக்குகள் தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய வழக்குகளைப் பற்றி கோமல் அன்பரசன் எழுதிய புத்தகம் கொலை கொலையாம் காரணமாம். எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு, டாக்டர் பிரகாஷ் வழக்கு, விஷ ஊசி வழக்கு, வைஜெயந்திமலா கார்டியன் வழக்கு உள்பட 25 வழக்குகள் பற்றிய விவரங்கள் இதில் […]

Read more