பழைய சோறு
பழைய சோறு, கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 70ரூ.
புதிய கோணம் புதிய தகவல்களுடன் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் கோமல் அன்பரசன் எழுத்தில் பழைய சோறு நூல் உருவாகி இருக்கிறது. பழைய சோறு உணவு என்பதை தாண்டி ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியலோடு கலந்த கலாச்சார குறியீடு.
இத்தகைய பழைய சோற்றால் உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன் சொக்கவைக்கும் நடையில் கவளம் கவளமாக தாயன்போடு நம் கைகளில் தருகிறார்கள். அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் எழுதப் பட்டிருப்பதால் படிப்பவருக்கு பழைய-சோறு மிகவும் நெருக்கமாகி விடுகிறது.
அழகாக குளிப்பதற்கும் ஆண்மை அதிகரிப்பதற்கும் கூட இதில் அற்புதமான வழிகள் இருப்பது விழிகளை விரிய வைக்கிறது. சாதம் என்றால் சர்க்கரை வியாதி என்று மருத்துவர்கள் கிளப்பும் பீதி குறித்து பின்னணி இந்நூலில் உடைக்கப்பட்டிருந்தது. பர்கர், பீட்சா மாயத்தில் இருந்து நம் சந்ததிகளையும் பழைய முறை நோக்கி திருப்ப எடுக்கப்பட்டுள்ள முக்கியமான முயற்சி இப்புத்தகம் என்று அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.
மொத்தத்தில் கோமல் அன்பரசன் எழுதியிருக்கும் பழைய சோறு உடல் சார்ந்த நலவியல் புத்தகம் மட்டுமல்ல படித்து முடித்தவுடன் மனசுக்கும் புத்துணர்வை தரும் அற்புதம் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய பெருமிதம் இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029701.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818