மேதையையும் பேதையாக்கும் போதை
மேதையையும் பேதையாக்கும் போதை, முளுங்குழி இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், விலை ரூ.130
மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த நூல் அழகாக படம்பிடித்து காட்டி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தலைவர்களாக இருந்த அலக்சாண்டர், ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் சாதனைகளை பல புரிந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ் பட கலைஞர்கள் ஆகியவர்கள் மது போதையால் எவ்வாறு சீரழிந்து என்ற விவரம் தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஏலகிரி அருகே உள்ள மாடப்பள்ளி மடப்பட்டு கிராமத்தில் மட்டும் குடிப்பழக்கத்துக்கு பலியான ஆண்களால் 200 பேர் இளம் விதவைகள் ஆனார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. போதைப் பொருள்களை பட்டியலிட்டு இருக்கும் இந்த நூல் போதையில் இருந்து விடுபடுவது எவ்வாறு என்பதற்கும் வழிகாட்டி இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 27-11-19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818