நம்பிக்கை நாயகன்
நம்பிக்கை நாயகன், ராம.ஹேமமாலினி, சென்னை புக்ஸ், விலை 50ரூ.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற். அவரது வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய பிறரின் கண்ணோட்டங்கள், பேட்டிகள் ஆகியவற்றை பதிவு செய்திருக்கும் நூல்.மோடி மிகப்பெரிய சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். ஆனால் அவற்றை தனக்குச் சாதகமான வாய்ப்புக்காக மாற்றிக்கொண்டது எப்படி, அரசியல் பின்புலமோ செல்வமோ செல்வாக்கோ பாரம்பரியமோ ஏதுமின்றி பிரதம வேட்பாளர் வரை முன்னேறியது எப்படி, ஏழைக் குடும்பத்தில் பிறந்த மோடி, தன்னிகரில்லா தேசியத் தலைவராக உயர்ந்தது எவ்வாறு? இவற்றுக்கு விடை காண உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் ராம.ஹேமமாலினி.
நன்றி:தினத்தந்தி, 20/4/2016.
—-
மாயூர யுத்தம், கோமல் அன்பரசன், காவிரி வெளியீடு, விலை 100ரூ.
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கோமல் அன்பரசன், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க மயிலாடுதுறைக்கு “மாயூரம்” என்ற பெயரும் உண்டு. மாயூரத்தின் சிறப்புகளை விவரிக்கும் அன்பரசன், அந்த ஊரின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
நன்றி:தினத்தந்தி, 20/4/2016.