தலையில்லாப் போராளி

தலையில்லாப் போராளி, பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஸ்லீப்பி ஹாலோ’ என்ற ஆங்கிலப் படத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட திரில்லர் படக் கதை. சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு போராளி தலையில்லா உடலாக குதிரை மீது அமர்ந்து வந்து கதிகலக்குவது போல உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் படக்கதைக்கு உயிரோட்டமான ஓவியம் மிகவும் உதவுகிறது. லயன் காமிக்ஸ் புத்தகத்துக்கே உரிய அத்தனை அம்சங்களையும் இதில் காண முடிகிறது.

நன்றி:தினத்தந்தி, 20/4/2016.

 

—-

அகந்தையின் அழிவும் அறிவின் உதயமும், சிதம்பர குற்றாலம், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ.

பகவான் ரமணர் அருளிய ‘உள்ளது நாற்பது’ உயர்ந்த தத்துவங்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். படிப்பவர்களுக்கு அனுபவம் மட்டுமே உண்மை என்பது தெளிவாக்குகிறது.

நன்றி:தினத்தந்தி, 20/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *