எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம்
எம்.ஜி.ஆர். திரைப்பட கருவூலம், இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், விலை 150ரூ.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றிய நூல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க நூல், இதயக்கனி எஸ். விஜயன் தயாரித்துள்ள இந்தப் புத்தகம். உண்மையில் இது கருவூலம்தான். எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் சதிலீலாவதி. அதில் போலீஸ் அதிகாரியாக சிறு வேடத்தில் தோன்றினார். அதில் இருந்து எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படத்தின் ‘ஸ்டில்’களும் இதில் இடம் பெற்றுள்ளன. படங்கள் பெரிய அளவில் அழகாக அச்சிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிக்குறிப்பை படித்தாலே, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். எம்.ஜி.ஆர். ரசிகர்களை மட்டுமல்ல, அனைவரையும் கவரக்கூடிய புத்தகம்.
நன்றி:தினத்தந்தி, 20/4/2016.
—-
ஸ்ரீ ஆஞ்சநேய மஹாபுராணம், பண்டித எஸ்.எஸ். ராகவாச்சார்யர், நர்மதா வெளியீடு, விலை 100ரூ.
புராணங்களில் வாயுபுத்திரனாக வர்ணிக்கப்படும் ஆஞ்சநேயரின் வரலாற்றை கூறும் நூல்.
நன்றி:தினத்தந்தி, 20/4/2016.