கொலை கொலையாம் காரணமாம்
கொலை கொலையாம் காரணமாம், கோமல் அன்பரசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 140ரூ.
தமிழகத்தை உலுக்கிய வழக்குகள் தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய வழக்குகளைப் பற்றி கோமல் அன்பரசன் எழுதிய புத்தகம் கொலை கொலையாம் காரணமாம். எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு, டாக்டர் பிரகாஷ் வழக்கு, விஷ ஊசி வழக்கு, வைஜெயந்திமலா கார்டியன் வழக்கு உள்பட 25 வழக்குகள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு வழக்கு பற்றிய விவரங்களையும் படிக்கும்போது, துப்பறியும் நாவலைப் படிக்கும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வளவு விறுவிறுப்புடன் எழுதி இருக்கிறார் கோமல் அன்பரசன். வழக்கு விவரங்கள் துல்லியமாக உள்ளன. அபூர்வமான படங்கள், புத்தகத்துக்கு மெருகூட்டுகின்றன.
—-
நிழலற்ற பயணம், பி.ஆர்.சுபாஸ் சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 300ரூ.
ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்றாலே அதை படிக்க சலிப்பு தோன்றலாம். ஆனாதல் அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்த நூல். தற்போது மத்திய உள்துறை மந்திரி என்ற உணர்ந்த இடத்தில் இருக்கும் சுஷில் குமார் ஷிண்டே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்து, வறுமையின் பிடியில் உழன்று, பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு, சில திருட்டுகளில் ஈடுபட்டு, வீட்டு வேலை உள்பட அடிமட்ட ஊழியனாக வேலைபார்த்து, பின்னர் இரவு நேரங்களில் படித்து படிப்படியாக வாழ்வில் முன்னேறி எவ்வாறு இந்த உன்னத நிலையை அடைந்தார் என்ற வியத்தகு வரலாறு, வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான தவல்களும், ஷிண்டேயின் அபூர்வ புகைப்படங்களும் புத்தகத்துக்கு மெருகூட்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 19/2/2014.