தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்
தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும், மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 144, விலை 80ரூ.
தாயுமானவர் பாடிய பாடல்கள் அவர் பெயராலே தாயுமானவர் பாடல்கள்என வழங்குவதை போலவே வேதாத்திரி மகரிஷியின் பாடல்கள் உரைகள் எல்லாம், வேதாத்திரியம் என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. இருவருமே குரு அருள் தேவை என்று கூறினர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற தாரக மந்திரத்தை தந்தவர் மகரிஷி. உடலோம்பல் இறை வழிபாடு செய்வதாகும் என்பது. மகரிஷியின் அழுத்தமான கொள்கையாகும். இதனால்தான் ஊனுக்குள் இறைவன் நின்று உலவி வருவதாக முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். நம்முடைய மனமே, நாம் பெற்றுள்ள ஒரு அரும்பெரும் பொக்கிஷமாகும். அதை நாம் எப்படி பயிற்றுவிக்கிறோமோ, அப்படியெல்லாம் அது விரிந்தும், சுருங்கியும் சிறப்போடும் செயல்படும். இதுதான் இந்த மனதின் விசித்திரமாகும். எனவேதான் இதை விசித்திர உலகம் என்கிறோம் என்கிறார் மகரிஷி. தாயுமானவரையும், வேதாத்திரி மகரிஷியையும் ஒப்பு நோக்கும் அருமையான ஆய்வு நூல். -எஸ். குரு.
—-
ஸ்ரீ அருணாசல அக்ஷர மணமாலை (தெளிவுரையுடன்), திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்ரமம், ஸ்ரீ அருணாசல அக்ஷர மணமாலை சேவை மையம், 20/125, புது கடலைக்காரர் வீதி, கோட்டூர் மலையாண்டிப்பட்டினம், பொள்ளாச்சி வட்டம் 642114, விலை- இலவசம்.
நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அதுவே அருணாசலம் (அருணை+அசலம்) அங்குள்ள சிவனே அருணாசலஈசன். அந்த ஈசன் மீது, பகவான் ரமணர் அருளிய இந்நூல், சரணாகதித் தத்துவத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. சிவனை நினைத்து, இந்நூலிலுள்ள 108 கண்ணி (ஈரடிப்பாடல்)களையும் நாள்தோறும் பாடினால் துன்பங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். -பேரா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 23/2/2014.