கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள்
கு.மா. பாலசுப்பிரமணியம் திரை இசைப்பாடல்கள், கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 90ரூ.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஜி.ராமநாதன் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், டி.ஜி.லிங்கப்பா முதலிய இசை அமைப்பாளர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில், சிறந்த பாடல்கள் எழுதிய கவிஞர்களில் கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒருவர். அவருடைய பல பாடல்கள் இன்னும் காலத்தை வென்று வாழ்கின்றன. அவற்றில் சில, சிங்காரவேலனே தேவா (கொஞ்சும் சலங்கை), அமுதைப் பொழிதும் நிலவே(தங்க மலை ரகசியம்), சித்திரம் பேசுதடி (சபாஷ் மீனா), உன்னைக் கண் தேடுதே (கணவனே கண்கண்ட தெய்வம்), யாரடி நீ மோகினி (உத்தமபுத்திரன்) . அவருடைய 176 திரை இசைப் பாடல்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். எல்லாமே மனதைக் கவரும் பாடல்கள்.
—-
101 உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர், தமிழாக்கம் எஸ்.ராமன், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ2, ஜாஷ் சேம்பர்ஸ், 7 அ சர் பிரோஷா மேத்தா சாலை, போர்ட், மும்பை 400001, விலை 175ரூ.
கதைகளை கேட்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அந்தவகையில் 101 தலைப்புகளில் சிறிய கதைகளை நூலாசிரியர் தொகுத்து புத்தகமாக மாற்றி உள்ளார். இதில் ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு கேள்வியை கேட்டு, அதன் மூலம் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டும் புதுமையான முறையை கையாண்டுள்ளார். இது சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறது. அனைத்து வயதினரும் படிக்கும் வகையில் உள்ள இந்த கதைகளில் மெல்லிய நகைச்சுவையும் இழையோடுகிறது. இதில் வெற்றியாளர்களின் பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளது இந்த நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. பரிசளிக்க ஏற்ற இந்த புத்தகம், ஆசீரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளவகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/2/2014.