நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!, கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.190. உடல்நிலையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு, மருத்துவ சந்தேகங்களுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று தேடுவோம். அப்படிப் பரவலாகவும் பொதுவாகவும் தோன்றும் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பதில் தரும் புத்தகம் இது. ஆரோக்கியம் காக்கும் பதில்களை வழங்கியவர் பிரபல மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான கு.கணேசன். கேள்வி-பதில் பாணியில் அமைந்திருக்கும் இந்நூல் வாசகர்களை மருத்துவ அறிவு பெற்றவர்களாக மாற்றிவிடும். நன்றி: தமிழ் இந்து, 21.12.2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.140 ‘சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும். அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் […]

Read more

அலர்ஜி

அலர்ஜி,  கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், பக்.133, விலை ரூ.140. அலர்ஜி குறித்து எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் எளிமையாகவும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் விடையளிக்கும் நூல். தினம் மாறிவரும் உணவுமுறை, மாசடைந்த சுற்றுச்சூழல், கலப்படம் மிகுந்த வேதிப் பொருள்கள் போன்ற ஏராளமான காரணங்களால் காய்ச்சல், தலைவலிக்கு அடுத்தபடியாக பலரையும் பல நேரங்களில் அவதிப்பட வைப்பது அலர்ஜிதான். இந்த அலர்ஜி எப்படி ஏற்படுகிறது, அதன் வகைகள், அதற்கான சரியான மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து தெளிவாக இந்நூல் விளக்குகிறது.நாகரிகம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் தங்களை […]

Read more

நோய் அரங்கம்

நோய் அரங்கம், கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை: ரூ.275 மருத்துவம் மிகப் பெரும் வியாபாரமாக உருக்கொண்டிருப்பதற்கு மக்களின் விழிப்புணர்வின்மையும் மிகமுக்கிய மூலதனம். பல்வேறு ஊடகங்களிலும் தொடர்ந்து நோய்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எளிமையாக எழுதிவருபவர் டாக்டர் கு.கணேசன். தலைவலி, மூட்டுவலி, சீதபேதி தொடங்கி எபோலா, டெங்கு என ஜிகா வைரஸ் வரை இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறார். பற்கள், நகங்களைப் பாதுகாக்கும் விஷயங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. வெறுமனே நோய் அறிகுறிகளையும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மட்டும் இவர் பேசுவதில்லை. […]

Read more

இனிப்பு மருத்துவம்

இனிப்பு மருத்துவம், கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 200ரூ. நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன். மருந்தும்.. மகத்துவமும்…! நன்றி: தமிழ் இந்து, 13/7/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

மருந்தும்.. மகத்துவமும்…!

மருந்தும்.. மகத்துவமும்…!, கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200 நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார் டாக்டர் கு.கணேசன். நன்றி: தமிழ் இந்து, 13/7/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029565.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்,  கு.கணேசன், காவ்யா, பக்.445, விலை ரூ.450. நாம் உட்கொள்ளும் உணவுகள், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் பற்றி மிக விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து, எந்த அளவு உண்ண வேண்டும் என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள முடியும். உணவு தொடர்பாக நம்மிடம் இருக்கும் பல கருத்துகள் எவ்வாறு அறிவியலுக்குப் புறம்பாக இருக்கின்றன என்பதையும், நம்மால் ஒதுக்கப்படும் அல்லது விரும்பி உண்ணப்படும் பல உணவுகள் நம் உடலுக்கு எந்த அளவுக்கு உகந்தவையாக இருக்கின்றன […]

Read more

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)

மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்), கு.கணேசன், காவ்யா, பக்.403, விலை ரூ.400. இன்றைய நவீன உலகில் நோய்கள் அதிகரித்திருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்தும் நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகளும், கருவிகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நூல் நாம் அறியாத பல புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், கருவிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. மாரடைப்பு நோயைக் குணப்படுத்த ஸ்டென்ட் பொருத்துவார்கள். இந்த ஸ்டென்ட்டைச் சரியாகப் பொருத்துவதற்கு ரத்தக்குழாயின் உட்பகுதியைத் தெரிந்து கொள்ள பயன்படும் ‘ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி தொழில்நுட்பம் 39‘ பற்றி இந்நூல் விளக்குகிறது. இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் […]

Read more