தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ.
தெரியாத விஷயம்

எல்லாம் தமிழ் சினிமாவின் பழைய சங்கதிகள்தான். சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சுவாரசியமான சாற்றின் துளிகள்தான். ஆனால் மரணமசாலா எழுத்தைக் கடைப்பிடிப்பதில் நிபுணரான பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் கைவண்ணத்தில் எடுத்தால் வைக்கவே முடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் நூல்தான் தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் ஆரம்ப கட்டம், தோல்வியிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், சறுக்கி விழுந்து காணாமல் போன நொடிகள் என எதெல்லாம் படிக்க ஆர்வமாக இருக்குமோ அவற்றை மட்டும் சொல்கிறார். அங்கங்கே பழைய சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும்போது அங்கிருந்து திடீரென சமகாலத்துக்குத் தாவி இவங்களோட அப்பாதான் அவர், இவரை அறிமுகப்படுத்தியவர்தான் அவர்… என காலவெளியில் அனாயாசமாகப் பயணம் செய்து வாசகரை அங்கும் இங்கும் அசையாமல் புத்தகத்திலேயே கவனம் குவிக்க வைக்கிறார் சிவராமன்.
சினிமாவில் நடிக்கவேண்டாம் என்று இருந்த முடிவை உடைத்து எம்.எஸ்.சுப்புலட்சுமி சாவித்ரி படத்தில் நாரதராக நடிக்கிறார். அதில் பெற்ற பணத்தைத்தான் தன் கணவர் தொடங்கும் கல்கி பத்திரிகைக்கு அளிக்கிறார். இந்த தகவல் இயக்குநர் ஒய்.வி.ராவ் பற்றிய கட்டுரையில் உள்ளது.
இந்த ஒய்.வி.ராவ் தான் நடிகை லட்சுமியின் தந்தை. முரட்டுக்காளை பட கிளைமாக்ஸ் காட்சியை ஒரு சீனப்படத்தில் இருந்து உருவும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குநர் எஸ்பிஎம்மிடம் அளிக்கிறார். அந்தக்காட்சி படமாக்கப்படுகிறது. அதில் நடித்த ஸ்டண்ட்மேன்கள்தான் சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, ராமு போன்ற பின்னாள் ஸ்டண்ட் மாண்டர்கள். இது போன்ற தெரியாத தகவல்கள் நிரம்பி ‘எக்ஸ்ப்ரஸ் எண்டர்டெய்னராக’ உருவாகி உள்ளது இந்நூல்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026393.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: அந்திமழை, 1/5/2018.