மக்களும் மரபுகளும்

மக்களும் மரபுகளும், நா.வானமாமலை, என்.சி.பி.எச்.(பி) லிட், பக். 150, விலை 100ரூ. மானிடவியல், இன வரைவியல் போன்ற துறை வழியாக ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறு, பண்பாட்டுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், இந்த நுால், தமிழ்ப் பழங்குடியினரின் பண்பாட்டுத் தொடர்பிலான செய்திகளை விரிவாகப் பேசுகிறது. இந்த நுாலில் உள்ள பன்னிரு கட்டுரைகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டிருப்பதோடு, அரிய பல தகவல்களைத் தொகுத்துக் கூறியிருக்கிறது. இதைப் பதிப்பித்திருக்கும் நா.வானமாமலை அரிதின்முயன்று இதைத் தொகுத்துள்ளார். கட்டுரைகளை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தேடல் முயற்சியுடன் […]

Read more

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 70, விலை50ரூ. இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்னைகளை எடுத்து விளக்கும்போது, தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை கற்க வழிவகுக்கிறது. இந்நுால் வழியாக வெளிப்படும் மார்க்சிய சிந்தனை, தமிழ் மரபில் வேர் பிடித்து வளரும் என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் […]

Read more

தமிழர் பண்பாடும் தத்துவமும்

தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், பக். 208, விலை 145ரூ. மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது. வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இரண்டும் முருகன் வழிபாட்டின் வரலாற்றை ஆய்வுப்பூர்வமாக விளக்குகிறது. மனிதனின் உழைப்பு, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் அடித்தளத்திலேயே கலைகள் தோன்றுகின்றன; […]

Read more

வீணாதி வீணன்

வீணாதி வீணன், நா. வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நா. வானமாமலை எழுதி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்ட வீணாதி வீணன் கதை நூலை படித்தேன். கதைப் பாடல் நூல் இது. தென்பாண்டி சீமையை ஆண்ட, ஐவர் ராசாக்களில் ஒருவரான, குலசேகரனின் கதையின், கிளைக் கதை. வள்ளியூரிலிருந்து, மதுரைக்கு இடம்பெயர்கிறார் குலசேகரன். அப்போது உறவுகளால் ஏமாற்றப்பட்டு உணவுக்கு வழியில்லாத ஒருவன் வள்ளியூர் வருகிறான். பசிக்கு பிச்சை எடுக்கிறான். உணவு கிடைக்கவில்லை. தொழில் செய்ய, விறகு வெட்டுகிறான். அரசின் வரிவிதிப்பு, தொழிலை […]

Read more