மார்க்சிய அறிவுத் தோற்றவியல்
மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 70, விலை50ரூ.
இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்னைகளை எடுத்து விளக்கும்போது, தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை கற்க வழிவகுக்கிறது.
இந்நுால் வழியாக வெளிப்படும் மார்க்சிய சிந்தனை, தமிழ் மரபில் வேர் பிடித்து வளரும் என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர், 1/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818