மதுரா

மதுரா, சின்மயன், வைஷ்ணவி பதிப்பகம், சென்னை, பக். 332, விலை 200ரூ. கராத்தே உடலையும் உள்ளத்தையும் தூண்மைப்படுத்தும் உத்தமமான கலை என்பதை இந்தக் கதையின் கதாநாயகன் கண்ணன் என்ற கதாபாத்திரம் மூலம் அற்புதமாக விவரித்துள்ளார் நூலாசிரியர். நாட்டியத் தாரகை மதுரா, கராத்தே வீரர் கண்ணன் இடையே உருவாகும் நட்பை, காமம் கலக்காத காதலுடன்… மிகவும் கண்ணியமான முறையில் நகர்த்தும் விதம் சிறப்பு. மதுராவுக்கு பரத நாட்டியம் பெரும் புகழை ஈட்டித் தரும் அதே வேளையில், ஆபத்தையும் அதே அளவுக்கு வாரி வழங்குகிறது. மதுராவை வில்லன்கள் […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை

தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், சென்னை, பக். 656, விலை 450ரூ. தாயுமானவரை ஒரு தத்துவ ஞானி, தத்துவ வித்து, ஞானக்கடல், சித்தர் என்றெல்லாம் கூறுவர். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களில் தத்தவம், சைவ சித்தாந்தம், சித்தர் இலக்கியம் போன்றவை ஆழமாகப் பதிவாகியுள்ளன. அவர் விராலிமலைச் சித்தர்களுடன் நெருங்கிப் பழகியவர். இல்லறத்தானாக இருந்து பின்னர் துறவறம் பூண்டவர். திருவருள் விலாசப் பரசிவ வணக்கம், பொருள் வணக்கம், கருணாகரக் கடவுள், பரிபூரணானந்தம், சின்மயானந்த குரு பதிகம், […]

Read more

எழில் மரம்

எழில் மரம், ஜேம்ஸ் டூலி, தமிழில் லியோ ஜோசப், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 414, விலை 360ரூ. இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் கல்வி தனியார்மயமாகி வரும் வேளையில் அதை நியாயப்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் நூல். உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட நூலாசிரியர், ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கல்வியைக் கற்றுத் தருகின்றன என்கிறார். ஏழை மக்கள் தங்களுடைய முன்னேற்றத்துக்கு அரசாங்கத்தைச் சாந்திராமல், சுய உதவியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சுய உதவிப் […]

Read more

நினைவு அலைகள்

நினைவு அலைகள், கலாநிகேதன் பாலு, வசந்தா பிரசுரம், சென்னை, பக். 206, விலை 150ரூ. கலைத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம் உள்ளவர் இந்நூலாசிரியர். இவர் 60களில் கலாநிகேதன் சபாவில் செயலாளர் பொறுப்பில் இருந்தபோது, அன்றைய பிரபலங்கள் பலருடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அந்த அனுபவங்களை அமுதசுரபி உள்பட பல்வேறு பத்திரிகைகளிலும் எழுத, அது பிரபலமானது. இந்நூலில் அவையும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முதல் கட்டுரையில் ஷெனாய் வாத்ய மேதை பிஸ்மில்லாகான் சென்னை வந்தபோது, அவரையும் அவரது இசைக்குழுவினரையும் திருமதி சுப்புலெட்சுமி கல்கி சதாசிவம் தங்கள் […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன்பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, பக். 360, விலை 300ரூ. வெற்று ஆரவாரங்கள், தேவையற்ற அலங்காரங்கள் இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு. கதைக்குக் கதை நம் அண்டைவீட்டு நிகழ்வுகளே கருக்கெண்டுள்ளது. மேல்வீடு முதல் தட்டான் வரையான 34 கதைகளும் நம் சக மனிதர்களின் அடையாளங்களைத் தாங்கி வந்துள்ள கதைகள். மேல் வீடு சங்கரியாகட்டும் கௌவியாகட்டும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையனாகட்டும் அத்தனை பேரும் இந்த சமூகத்தின் ஏதோ ஒரு சிக்கலில் விடுபட முடியாத புதிர்களாகவே உள்ளனர். சிவபாஸ்கரன், லக்ஷ்மி அக்கா, அனு, விஜயலட்சுமி, சீனிவாசன் […]

Read more

தேவதையைத் தொலைத்தவன்

தேவதையைத் தொலைத்தவன், பஞ்சவர்ணம் பதிப்பகம், புதுக்கோட்டை மாவட்டம், விலை 100ரூ. காதல் கவிதைகள் கொண்ட புத்தகம். கவிஞர் ஏம்பல்ராஜா, தேவதாசாகவே மாறி காதல் கீதங்களை இசைக்கிறார். மாதிரிக்கு சில- நீ அலை! வந்ததும் போய்விட்டாய்! நான் கரை! எங்கே போவது? என் கண்ணீர் வற்றிவிட்டது! உன் கண்களைக் கொஞ்சம் தா! அழுதுவிட்டுத் தருகிறேன். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் படங்கள். விலை 100ரூ. ஏம்பல்ராஜா ஒரு கல்லூரிப் பேருந்தும் சில காதல் தேவதைகளும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுவும் காதல் […]

Read more

நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி

நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி, சதானந்தன் பேப்பர் மார்ட், சென்னை, விலை 100ரூ. சிவாஜிகணேசன், விளம்பரப்படுத்திக் கொள்ளமல் நிறைய தான தர்மங்கள் செய்திருக்கிறார் என்று கூறுகிறார் நூலாசிரியர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம். சிவாஜி வழங்கிய நன்கொடைகளைப் பட்டியலிட்டு இருக்கிறார். புத்தகத்தின் அமைப்பை பாராட்ட வேண்டும். ஒருபக்கம் சிவாஜியின் படம், அடுத்தபக்கம், அவரைப் பற்றிய விவரங்கள். சிவாஜியின் நவரச நடிப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் படங்களை கவனத்துடன் தேர்வு செய்துள்ளார் ஆசிரியர். சிவாஜி பல்வேறு கட்சித் தலைவர்களுடன இருக்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- […]

Read more

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள்

வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள், கவின் மீடியா ஓர்க்ஸ், சென்னை, விலை 50ரூ. கடும் உழைப்பும், ஆர்வமும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறுகிறார், காரையடி செல்வன். புத்தகத்தின் பெயர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று சூட்டப்பட்டிருந்தாலும், அதை எளிமையாகக் கூறினால் வெற்றி பெற்றவர்கள் வரலாறு என்றே கூறவேண்டும். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களை பேட்டிகண்டு, வெற்றியுடன் ரகசியத்தை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு, இந்தப் புத்தகம் சிறந்த டானிக். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.   —- சொல்லுக்குள் ஈரம், வானதி பதிப்பகம், […]

Read more

சினிமா சீக்ரெட்

சினிமா சீக்ரெட், கலைஞானம், நக்கீரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலைஞானம். பட அதிபர், கதாசிரியர், வசன கர்த்தா, டைரக்டர் என்று பல முகம் படைத்தவர். பாதி கதை படமாக்கப்பட்ட பிறகு, சில படங்கள் மேலே நகர முடியாமல் நின்று விடுவது உண்டு. அப்போது கதையை ரிப்பேர் செய்ய பட அதிபர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். கலைஞானம் தமது அனுபவங்களை சினிமா சீக்ரெட் என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவற்றை புத்தகங்களாக நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. […]

Read more

டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பாரிஸ் நகர அருங்காட்சியகத்தில் பணிபுரியும் ஜாக்குவஸ் மர்மமான முறையில் தாக்கப்படுகிறார். அவர் இறக்கும் முன், தனது வயிற்றில் சில சின்னங்களையும் ரகசிய எண்ணங்களையும் ரத்தம் கொண்டு எழுதிவைத்து இறக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் பரபரப்பான சம்பவங்கள், புதிர்கள், மர்மங்கள் ஆகியவற்றோடு சில வரலாற்று சான்றுகளாலும் சுவாரசியமாக பின்னப்பட்டுள்ள இந்த நாவல், உலகம் முழுவதும் பாராட்டுக்களையும் பலத்த எதிர்ப்புகளையும் ஒரு சேரக் குவித்து சாதனை படைத்தது. […]

Read more
1 2 3 4 5 8