விமர்சனப் புயல்

விமர்சனப் புயல், க. நா. சு. இராம. இலக்குவன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 272, விலை 200ரூ. நூலாசிரியர் முனைவர் பட்டம் பெற க.நா.க.வின் திறனாய்வுப் பணிகள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வே இந்த நூல். வணிக, கலை இகழ் படைப்பாளிகளின் உள்ளங்களை அசைத்தும், அதிரவும் வைத்த க.நா.சு. தரமான புதினங்கள் இவை என சுட்டிக்காட்டியதுடன் தரமற்றவற்றைக் கடுமையாக விமர்சித்து உலகத் தரம் நோக்கி நம் எழுத்தாளர்கள் கவனம் செல்ல வேண்டும் என்றும் உரைத்தவர். சிறந்த முதல் தரச் சிறுகதையாளர் […]

Read more

ஜோன் ஆஃப் ஆர்க்

ஜோன் ஆஃப் ஆர்க், தமிழில் சி. ஜெயாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. உயிருடன் எரிந்த உத்தமப் பெண்மணி என்றைக்குமே பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் போராடும் குணமுள்ளவர்களை விட்டு வைப்பார்களா என்ன? பதினைந்தாம் நூற்றாண்டில், தன்னுடைய பத்தொன்பது வயதில், பிரிட்டனுடன் மோதிப் பிரான்சு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டான் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைச் சூனியக்காரி என்று முத்திரை குத்தி உயிரோடு எரித்துக் கொன்றது ஆண்களின் அதிகார வர்க்கம். பிற்காலத்தில், 1920ம் ஆண்டில் இந்தப் பெண்மணிக்குக் கிறிஸ்துவத் திருச்சபையினரால் புனிதப் பெண்மணி என்ற […]

Read more

நெருப்பில் பூத்த ஆசிரியர்

நெருப்பில் பூத்த ஆசிரியர், கலைமாமணி எஃப் சூசை மாணிக்கம், இதயம் பதிப்பகம், மதுரை, விலை 250ரூ. குத்துமதிப்பாய்ப் போட்ட மதிப்பெண்கள் தேர்வு விடைத்தாளை முறையாகத் திருத்தி மதிப்பெண் போடப்படவில்லை. மொத்தமாக விடைத்தாளின் மூலையில் 28 என்று போடப்பட்டிருக்கிறது, மாணவர் எதிர்பார்ப்பு அறுபதுக்கு மேலே, கேட்டிகிறார். ஆசிரியரின் பதில் இது, “டேய்! நீ பெரியசாமி மகன்தானே… உனக்கு அவ்வளவுதானடா மார்க் போட முடியும். உன்னாலே இருபத்தெட்டு மார்க்தாண்டா எடுக்க முடியும். மடப்பய மவனே, உட்காருடா.” இப்படி ஒரு நிலை இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. பிறப்பை […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 165ரூ. தமிழ்நிலத்தில் வேளாண் சிந்தனையை விதைத்தவர். தனது எண்ணங்களை வியாபாரப் பொருளாக மாற்றாதவர். பேச்சு வேறு, செயல் வேறு என வாழாதவர். மண்ணுக்குள் புதையும் வரை சொன்ன சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், பசுமைப் போராளி நம்மாழ்வார். சிலர் பேசுவார்கள். செயல்பட மாட்டார்கள். சிலர் செயல்படவும் செய்வார்கள். தான் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், நம்மாழ்வார் சிந்தித்தார், செயல்படுத்தினார். தன்னோடு சேர்ந்து ஏராளமானவர்களையும் செயல்பட வைத்தார். மறைவுக்குப் பிறகும் அவரது பச்சைத்துண்டு பசுமைப் […]

Read more

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாஸன், சேகர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. மூத்த தமிழ் எழுத்தாளரான மு. ஸ்ரீனிவாஸன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதி வருபவர். இவருடைய கட்டுரைகள், கதைகள், கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்த மஞ்சரி, பிறர் கவனத்துக்கு வராத பல அம்சங்களை எளிய நடையில் வாசகர்களிடம் சேர்க்கிறது. அறிவியல் தமிழ் எழுத்தாளரான பெ.நா. அப்புசுவாமியின் கடிதங்கள் குறித்த கட்டுரையில் அவரது மேதைமையும் தன்னடக்கமும் வெளிப்படுகின்றன. சிறையில் தவம் என்ற கட்டுரை, பர்மாவின் மாண்டலே சிறையில் […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. அழகாக மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு எழுத்தாளர்களின் 13 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் இரு பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் உலகத் தரமானவை. முதலாவதாக, மலையாள எழுத்தாளர் சீதா இரண்யனின், திருக்கச்சூர் எக்ஸ்பிரஸில் இடாலோ கால்வினோ. வேலையில்லாத, மணமாகாத, கனவுலகவாசி பேருந்தில் செல்லும்போது, அவன் அருகே அமரும் இளம் பெண் அவன் மீது தூங்கி விழுவதை அவன் உடன்பாடாகக் கருதி எல்லை மீறுவதும், தப்பியோடுவதும் கதை. மிகை இல்லாமல், […]

Read more

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள், எடையூர் சிவமதி, வானவில் புத்தகாலயம், சென்னை, பக். 304, விலை 222ரூ. புகழ்பெற்ற திருக்கோயில்கள் பற்றி அவற்றின் தொன்மை, ஆன்மிகச் சிறப்பு, வரலாறு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆன்மிகக் களஞ்சியமாக அமைந்துள்ளது இந்த நூல். சித்தர்களின் ராஜ்யமான சதுரகிரி மலையின் தெய்வங்கள், கல்விக் கடவுளான கூத்தனூர் சரஸ்வதி ஆலய தரிசனம், துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோயில், பேட் துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தம் மனைவியரோடு வசித்த வீடுகள் பற்றிய செய்திகள் அபூர்வமானவை. அமெரிக்கா, பிட்ஸ்பெர்க் நகரில் அமைந்துள்ள […]

Read more

செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரைகள்

செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள், பதிப்பாசிரியர் இராம. குருநாதன், முதல் தொகுதி பக். 416, விலை 275ரூ., இரண்டாம் தொகுதி விழிகள் பதிப்பகம், பக். 416, விலை 275ரூ. தருமை ஆதினத்தினத்தின் மூலம் செந்தமிழ் காவலர் என்ற பட்டம் பெற்ற சிதம்பரநாத செட்டியார், மாணவர் பருவத்திலேயே தான் பயின்ற கல்லூரியில், ஆகிலத்திலேயே எழுதப்பட்டு வந்த அறிக்கைகளைக் கண்டித்து, பல எதிர்ப்புகளையும் தாண்டி தமிழில் எழுதி, மாணவர்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர். பிராங்க்ளின் கெல், ஜி.யு.போப், நினைவு தங்கப் பதக்கங்களைப் […]

Read more

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், தனி நாயக அடிகள், தமிழில் க. பூரணச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 150ரூ. ஓர் இன மக்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் நிர்ணயிப்பதில் நிலவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மண்ணில் தோன்றுகின்ற கவிதை உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் அந்த மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன. இதற்கு தமிழ் மண்ணும் தமிழ்க் கவிதைகளும் விதிவிலக்கல்ல. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியவை தமிழ் மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை மட்டுமின்றி, அன்றைய சுற்றுச்சுசூழல் […]

Read more

கோரா

கோரா, தாகூர், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 350ரூ. தாகூர் எழுதிய நாவல் கோரா கோரா என்னும் இந்நாவல் இரவீந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம், ஆண் பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு, பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையின் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டுக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு மகத்தான நாவல் இது. வங்க மொழியில் தாகூர் எழுதிய நாவல் மகர்ஜியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்த மொழிபெயர்ப்பிலிருந்த தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார் […]

Read more
1 3 4 5 6 7 8