பிஸினஸ் மகாராணிகள்

பிஸினஸ் மகாராணிகள், சு. கவிதை, குமுதம் புது(த்)தகம், பக். 136, விலை 95ரூ. தாங்கள் வாழும் சூழ்நிலையை மீறி, ஜெயிக்கும் பெண்கள் பற்றிய சாதனைத் தொகுப்பு இந்நூல். குமுதம் சிநேகிதியில் தொடராக வந்தபோது பல பெண்களின் வாழ்வில் சாதிக்க தூண்டுகோலாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் எல்லாம் பெண்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கிரண் மஜுர்தார்ஷா வினிதாபாலி, லீனாநாயர், இந்திராநூயி உள்ளிட்ட பல பிஸினஸ் மகாராணிகளின் அனுபவங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவன. அவர்கள் தரும் சக்ஸஸ் டிப்ஸகள், சவால்களை […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, பத்திரிகை என்று எழுத்துலகில் பன்முகத்தன்மையுடன் பயணிக்கும் இந்நூலாசிரியர், பல்வேறு சமயங்களில் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலை வாசிக்கும்போதே இவருக்கு பாரதி மீதுள்ள ஈர்ப்பை உணர முடிகிறது. பாரதியும் பாரதமும், பாரதியும் இஸ்லாமும், பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் முதலான கட்டுரைகளில் மட்டுமல்ல, இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலுமே பாரதியின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதி, வ.வே.சு.ஐயர், கல்கி, […]

Read more

ஃபேஸ்புக் பக்கங்கள்

ஃபேஸ்புக் பக்கங்கள் (தொகுதி 1), தொகுப்பு சுப்ரஜா, கலைஞன் பதிப்பகம், பக். 416, விலை 312ரூ. முக நூலில் இருப்பவர்களுக்குத்தான் அந்த சுதந்திர தாகம் புரியும். இது வெட்டி வேலை என்று ஸ்டேட்டஸ் போடுவதில்கூட ஒரு கருத்து இருக்கும். அல்லது உண்மை இருக்கும். நிறையப் பேர் துணிச்சல் மிக்கவர்களானதே ஃபேஸ்புக் வருகைக்குப் பிறகுதான். பிரபலமாக இருந்தால்தான் எழுத முடியும் என்ற பெர்லின் கோட்டையை உடைத்தெறிந்தது ஃபேஸ்புக்தான். கவிதை, சிறுகதை, நாவல், அரசியல், நாடகம், பாட்டு, காமெடி, விமர்சனங்கள், சர்ச்சைகள், சண்டைகள், சமையல்கள், சோதிடம், பக்தி […]

Read more

மன்மதக் கொலைகள்

மன்மதக் கொலைகள், தெக்கூர் அனிதா, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை, பக். 144, விலை 99ரூ. துப்பறியும் நாவல்களைப் படிப்பதற்கு என்றே ஒரு வாசகர் வட்டம் உள்ளது. கதையில் வரும் சம்பவங்கள், அதில் இடம் பெறும் மாந்தர்கள், திருப்புமுனைகள், கிளைமாக்ஸ் அத்தனையும் அன்றாட வாழ்வில் நடந்தவை போலவே தோன்றுவதால் கூடுதல் ஈர்ப்பு எழுகிறது. படிப்போர் ஒன்று நினைக்க அதன் திருப்புமுனைகளும் கிளைமாக்ஸும் அமைந்துள்ளன. மூன்று கொலைகளைச் செய்துவிட்டு தப்பிக்க முயலும் தயாளனை, காவல்துறையினர் பொறிவைத்துப் பிடிக்கும் ஒவ்வொரு கட்டமும் ஒரு திருப்புமுனைதான். 2007ல் சென்னையில் […]

Read more

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், ம. இராஜேந்திரன், அடையாளம் வெளியீடு, விலை 180ரூ. தமிழகப் பழங்குடி மக்கள் தமிழ் மக்கள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளார்கள். அதில் முக்கியமானவர் மெக்கன்சி. கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது இளம் வயதில் வேலைக்குச் சேர்ந்த மெக்கன்சி, 1783ல் இந்தியாவுக்கு ஒரு பொறியாளராக வந்தார். அவருக்கு இங்கு நில அளவையாளர் பணி கிடைத்தது. 1818ல் இந்தியாவின் தலைமை நில அளவையாளர் ஆனார். இந்தியாவின் நீள அகலங்களை அளந்து நிர்வாகத்தை வடிவமைக்க வேண்டிய காலகட்டம் அது. வெறும் மண்ணைத் தேடிப் […]

Read more
1 6 7 8