சொல் புதிது பொருள் புதிது

சொல் புதிது பொருள் புதிது, ம. இராஜேந்திரன், கவிதா பதிப்பகம், பக். 224, விலை 170ரூ. நமது அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் ஐம்பது ஆங்கிலச் சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்வு நோக்கில் நிறுவியிருக்கிறார் ம. இராசேந்திரன். ஆங்கிலத்தில் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள்; இதைத் தமிழில் இந்த சொல்லால் குறிக்கலாம் என்கிற பாணியில் இவர் எழுதவில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பொருள்; அந்தப் பொருளையுணர்த்தும் தமிழ்ச் சொற்கள். அவை இலக்கியத்திலும் மக்கள் வழக்கிலும் எங்கெங்கெல்லாம் பயின்று வந்திருக்கின்றன; அவற்றில் மிகவும் […]

Read more

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், ம. இராஜேந்திரன், அடையாளம் வெளியீடு, விலை 180ரூ. தமிழகப் பழங்குடி மக்கள் தமிழ் மக்கள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளார்கள். அதில் முக்கியமானவர் மெக்கன்சி. கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது இளம் வயதில் வேலைக்குச் சேர்ந்த மெக்கன்சி, 1783ல் இந்தியாவுக்கு ஒரு பொறியாளராக வந்தார். அவருக்கு இங்கு நில அளவையாளர் பணி கிடைத்தது. 1818ல் இந்தியாவின் தலைமை நில அளவையாளர் ஆனார். இந்தியாவின் நீள அகலங்களை அளந்து நிர்வாகத்தை வடிவமைக்க வேண்டிய காலகட்டம் அது. வெறும் மண்ணைத் தேடிப் […]

Read more