பழவேற்காடு முதல் நீரோடி வரை

பழவேற்காடு முதல் நீரோடி வரை, வறீதையா கான்ஸ்தந்தின், எதிர் வெளியீடு, விலை 130ரூ. என் விடலைப் பருவம் மீனவக் கிராமத்தின் வாசனை அடுக்குகளாக மனதில் பதிந்துகிடக்கிறது. மறக்க இயாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற்கரை வாழக்கையில் வருடத்தை மீன்வரவுகளின் பருவங்களாக வரிசைப்படுத்திவிட முடியும். சாளை, சாவாளை, குதிப்பு, சள்ளை மீன், அயிலை, நெத்திலி, கூனி, இறால், மரத்துமீன், கணவாய், கெழுது, கிளார்த்தி என்று எளிதாய்ப் பட்டியல்படுத்தலாம். ஒவ்வொரு மீனின் வருகையின்போதும் கடலோரம் புதுப்புது வாசனைகளை அணிந்துகொள்ளும். இதையெல்லாம் […]

Read more

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. புதுக்கோட்டை வெங்கட்ராமன் தமக்கு வயதாகிவிட்டது என்பதையே உணராமல், சென்னையிலும் வெளியிடங்களிலும் நடைபெறுகிற இலக்கிய நிகழ்வுகளில் எப்போதும் இளமை உற்சாகத்தோடு பார்வையாளராகப் பங்கேற்கிறவர் பி.வி. என்று நண்பர்கள் வட்டத்தில் அறியப்படுகிற கண்ணபிரான் அச்சகம் வெளியிட்டது டிங்டாங் சிறுவர் வார இதழ். இதன் ஆசிரியராக இருந்த வடமலையழகன்தான் இந்த பி.வி. டி.வி.எஸ். நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.வி. இவர் கேரள மாநிலம் கொச்சினிலும் புதுக்கோட்டையிலும் மதுரையிலும் பணியாற்றியபோது, […]

Read more

பாரம்பரிய மருத்துவம்

பாரம்பரிய மருத்துவம், டாக்டர் சக்தி சுப்பிரமணி, ஸ்ரீ லக்ஷ்மி பதிப்பகம், விலை 325ரூ. ஆயுர்வேதம், சித்தா, ஜோதிடம் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், பாரம்பரிய மருத்துவம் என்ற தலைப்பில் நமது முன்னோர் எழுதியுள்ள தமில் நூல்களிலுள்ள மருத்துவக் குறிப்புகளை ஆய்வு செய்து M.Phil பட்டமும் பெற்று, சிறந்த சித்த மருத்துவராகவும் திகழ்கிறார். இவர் தனது மருத்துவ ஆய்வு மற்றும் அனுபவத்தின் பலனை பொதுமக்களும் அறிந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், தினமும் தொலைக்காட்சி வாயிலாகவும் அவற்றை எடுத்துரைத்து வருகிறார். அவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், சென்னை, பக். 256, விலை 220ரூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான திரை ஆளுமையாளகத் திகழ்ந்தவர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ள புத்தகமே நெஞ்சம் நிறைந்த நினைவுகள். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் இந்தப் புத்தகத்தையும் அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்றே அழகுற ஆவணப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஏவி. […]

Read more

என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை

என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் […]

Read more

தூக்கு மர நிழலில்

தூக்கு மர நிழலில், சி.ஏ. பாலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 120ரூ. பொதுவுடமை சித்தாந்தத்தை உடல், பொருள், ஆவியாகக் கருதிய உண்மையான கம்பூனிஸத் தோழர்களில் சி.ஏ. பாலனும் ஒருவர். மக்கள் நலனுக்காக 15 ஆண்டு, 9 மாதம், 21 நாள்கள் சிறைக் கொட்டடியில் தன் வாழ்நாளைக் கழித்து, மரணத்தின் வாசல் வரை சென்று உயிரோடு மீண்டு வந்த அவரின் நீண்ட, நெடிய மிகக்கொடுமையான சிறை அனுபவமே தூக்கு மர நிழலில். இது 1976இல் புத்தகமாக வெளியானது. […]

Read more

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும்

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 328, விலை 245ரூ. இந்திய மாநிலங்கள், மக்கள் இறை நம்பிக்கை, வணங்கப்படும் தெய்வங்கள், விரதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், மாறுபட்ட வழிமுறைகள், மாநில வாரியாகக் கொண்டாடப்படும் விழாக்கள் அவற்றின் தாத்பரியங்களை அழகாக விளக்குகிறது இந்நூல். பொதுவாக காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை, அந்தந்த மாநிலங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களுக்கான புராண நிகழ்வுகளும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் மேவாரில் கொண்டாடப்படும் டீஜ் விழா, பார்வதி தேவிக்கானது. இதைத் திருமணமான பெண்கள் […]

Read more

மக்கள் கண்ட மகான்கள்

மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. பாரதத்தில் தோன்றிய வேத மகரிஷிகள், தெய்விக புருஷர்கள், மகான்கள், சாதுக்கள் போன்றோரின் வாழ்க்கை நெறி, இறைவனிடம் மகான்கள் கொண்ட பக்தியின் பெருமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இதில் கபீர் தாசர், துளசி தாசர், புரந்தர தாசர், ஸ்ரீ ராகவேந்திரர், மீரா பாய், சக்கு பாய் ஆகிய 31 மகான்களின் ஆன்மிக சரித்திரம் அடங்கியுள்ளது. பத்து வயது சிறுமியான சக்கு பாய் தோழியருடன் மணல் வீடு கட்டி விளையாடுகிறாள். […]

Read more

உள்ளத்திறப்பு

உள்ளத்திறப்பு, பெரணமல்லூர் சேகரன், பக். 154, விலை 100ரூ. 22 சிறுகதைகளடங்கிய சிறுகதைத் தொகுப்பு. அரசியல் களத்தில் மக்களை முட்டாளாக்க நினைக்கு அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும் ஓட்டு, வாசகர்கள் மனதில் சிகரமாக உயர்ந்து நிற்கும் எழுத்தாளரின் நிஜத்தை அறிந்தபோது மண்குதிரை ஆகிப்போன மாயமும், கடனை வாங்கி அல்லல்பட்டு வீட்டைக் கட்டினால் இல்லத்திறப்பு விழாவுக்கு வரும் சொந்த பந்தங்கள் சுலபமாக விமர்சனம் செய்துவிட்டு போகும் உள்ளத்திறப்பு, பெண்களின் நிலையையும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களையும், வலிகளையும் சொல்லும் மீறல், கிணற்றுத் தவளைகளை வானத்துப் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு துளிதான் மலாலா. ஆனால் அந்த ஒரு துளி பெரும் காட்டாற்று வெள்ளமாக மாறும் என்று தாலிபான்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காக குல்மக்காய் என்ற புனைபெயரில் அவர் எழுதியபோதுதான் அனைவரின் கவனமும் அவர்மேல் விழுந்தது. தாலிபான்களின் கவனம் உட்பட. அதன் விளைவு, 2012 அக்டோபரில் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அவரைக் குறிவைத்து […]

Read more
1 5 6 7 8