நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ.

பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு துளிதான் மலாலா. ஆனால் அந்த ஒரு துளி பெரும் காட்டாற்று வெள்ளமாக மாறும் என்று தாலிபான்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காக குல்மக்காய் என்ற புனைபெயரில் அவர் எழுதியபோதுதான் அனைவரின் கவனமும் அவர்மேல் விழுந்தது. தாலிபான்களின் கவனம் உட்பட. அதன் விளைவு, 2012 அக்டோபரில் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அவரைக் குறிவைத்து தலையில் சுட்டனர் தாலிபான்கள். அவருடைய துணிச்சலையும் சொல்வன்மையையும் கண்டு பாகிஸ்தான் அரசே விழி உயர்த்தியது. தேசிய அமைதிப்பரிசு, சர்வதேச குழந்தைகள் அமைதிப்பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு என்று இளம் வயதிலேயே பெற்று புரட்சிப் பெண்ணாக வலம் வருகிறார். உலக அளவில் முஸ்லிம் சமூகத்தினர் விடுதலைக்கும் பெண்களுக்கான கல்வி முன்னேற்றத்திற்குமான குறியீடாகவும் உருவாகி உள்ள மலாலா பற்றிய கதையே இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி:  குமுதம், 18/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *