வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா
வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா, ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.140. இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையினும் வலி நிறைந்தது, வழக்கறிஞர் சன்னது பறிபோய் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவரது விடுதலைபெற்ற வாழ்க்கை. துயர் நிறைந்திருந்த இக்காலக்கட்டத்தில் அவருக்குப் பெருந்துணையாய் நின்றவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்திருந்ததால் அவர் வழியாகவும் பண உதவி செய்திருந்தனர். ஆனால், காந்தி அந்தப் பணத்தை வ.உ.சி.க்குத் தராமல் ஏமாற்றிவிட்டார் என்கிற தவறான தகவலின் அடிப்படையில், […]
Read more