அகதியின் துயரம்
அகதியின் துயரம், பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.120
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாடு திரும்பவில்லை. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் துயரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால்.
உலக அகதிகளின் நிலவரம், இந்திய நாடு எதிர்கொள்ளும் அகதி பிரச்னை, உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் அகதிகள், மொழி சார்ந்த நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள போட்டி அரசியல் என பல கருத்துகளை அலசுகிறது.
இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான துயரங்கள் பற்றியும் விரிவாக அலசப்பட்டுள்ளது. தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமை தேவையையும், இந்திய பாதுகாப்பையும் முன் வைத்து, இவற்றை உறுதி செய்கிற தேசிய அகதிகள் சட்டம் பற்றியும் விரிவாக பேசுகிறது. தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பெர்னார்ட் சந்திரா. துலக்கமற்று இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் துயரம் மீது அக்கறை காட்டும் வகையில் வெளிவந்துள்ள நுால்.
– பாவெல்
நன்றி: தினமலர், 7/11/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031054_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818