ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி
ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ.
புதுக்கோட்டை வெங்கட்ராமன் தமக்கு வயதாகிவிட்டது என்பதையே உணராமல், சென்னையிலும் வெளியிடங்களிலும் நடைபெறுகிற இலக்கிய நிகழ்வுகளில் எப்போதும் இளமை உற்சாகத்தோடு பார்வையாளராகப் பங்கேற்கிறவர் பி.வி. என்று நண்பர்கள் வட்டத்தில் அறியப்படுகிற கண்ணபிரான் அச்சகம் வெளியிட்டது டிங்டாங் சிறுவர் வார இதழ். இதன் ஆசிரியராக இருந்த வடமலையழகன்தான் இந்த பி.வி. டி.வி.எஸ். நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.வி. இவர் கேரள மாநிலம் கொச்சினிலும் புதுக்கோட்டையிலும் மதுரையிலும் பணியாற்றியபோது, அனேகமாக எல்லா இலக்கியவாதிகளையும் நண்பர்களாக்கிக் கொண்டார். அந்த நினைவுகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். சில பிரமுகர்களைப் பற்றி இவரே எழுதிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. எல்லாம் சிறு சிறு கட்டுரைகள். பள்ளிக்கூடத்தில் முதல் மாணவராகத் திகழ்ந்த வித்தியாசமான பெருமையும் இவருக்கு உண்டு. மணியடித்ததும் முதலில் வெளியே ஓடிவருகிற மாணவர் இவர்தான். ரசிகமணி இருந்தால் இவரை மிகவும் பாராட்டுவார். புதுக்கோட்டை பூமியின் புகழ் பரப்புவதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகிற பி.வி.யை எவ்வளவு பாராட்டினாலும் தரும். நன்றி: கல்கி, 31/5/2015.