தமிழ்ச்சுரபி
தமிழ்ச்சுரபி, அமுதசுரபி விக்கிரமன், இலக்கியப்பீடம், பக். 544, விலை 450ரூ.
தமிழ் இலக்கிய உலகிலும் இதழியல் வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்கதோர் இதழ், அமுதசுரபி என்பது அனைவரும் ஏற்கும் ஒன்று. அதன் துவக்கால அருஞ்சாதனைகளின் முதல் தொகுப்பு நூலாக மலர்ந்துள்ளது இந்த, தமிழ்ச்சுரபி. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, அமுதசரபி ஆசிரியராகப் பணியாற்றிய விக்கிரமனே, இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார். பிஸ்ரீ,இ பெ.நா.அப்புசாமி, எஸ். வையாபுரி பிள்ளை, க.நா.சு., டாக்டர் மு.வ., தி.ஜ.ரா., மா.ராசமாணிக்கனார், க.அ. நீலகண்டசாஸ்திரி, கி.வா.ஜ., பரலி. சு. நெல்லையப்பர் போன்ற புகழ்மிகு அறிஞர் பெருமக்களின் அரிய கட்டுரைகளும், உமாசந்திரன், துறைவன், கரிச்சான் குஞ்சு, பெ. தூரன், பி.எஸ்.ராமையா, ல.ச. ராமாமிருதம் போன்றோரின் சிறுகதைகளும் சோமு, தமிழழகன், குயிலன், தமிழ் ஓளி, தேசிக விநாயகம் பிள்ளை, சாண்டில்யன், சக்தித் கனல் போன்றோரின் கவிதைகளுமாய், அள்ளக் குறையாத அமுதசுரபியாகத் திகழ்கிறது தமிழ்ச்சுரபி. -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 31/5/2015.
—-
இஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள், எஸ்.எஸ். ராகவாசார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
சகல பாக்கியங்கள் தரும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம மந்திரம், பிள்ளைப்பேறு தரும் ஸ்ரீ சந்தான கோபால மந்திரம் மற்றும் நவதுர்க்கை மந்திரம், ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம் உள்ளிட்ட பல்வேறு மந்திரங்கள் அடங்கிய நூலாகும். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.