இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள்
இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள், தமிழ் உயராய்வு மையம், நாகர்கோவில்.
இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரு குடும்பக் கதையாக அமைந்தாலும், அதனுள் மூவேந்தர்கள், மூன்று நாடு, மூன்று தமிழ் என பல மூன்றின் தன்மைகள் காணப்படுகின்றன. இரண்டு நூலையும் சேர்த்து, இரட்டைக் காப்பியங்கள் என்று உரைப்பது மரபு. இதனுள் பல மதிப்பீடுகள் பேசப்படுகின்றன. சமயம், நாடு, மன்னன், குலம், தனிமனிதன் என பல நிலைகளை மதிப்பீடு செய்வதாய் இந்நூல் அமைந்துள்ளது. இந்த நூலின் கருத்துக்கள் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயனுடையதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.
—-
கணித மேதை சீனிவாச இராமானுசம், இராசகுணா பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.
வாழ்க்கையை வறுமையில் தொடங்கி, தனது கணிதத் திறமையால் உலகம் போற்ற வாழ்ந்து இளம் வயதிலேயே மரணம் அடைந்த கணித மேதை இராமானுசத்தின் வரலாற்றை செ. ஏழுமலை வசன நடையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.